- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக்கை கவனிச்சீங்களா.. அதை மூடி மறைக்க பாத்து வசமா சிக்கிட்டாரு.. கொளுத்தி போட்ட முன்னாள் வீரர்..

ஹர்திக்கை கவனிச்சீங்களா.. அதை மூடி மறைக்க பாத்து வசமா சிக்கிட்டாரு.. கொளுத்தி போட்ட முன்னாள் வீரர்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரிலேயே பாதி போட்டிகள் முடிவதற்குள் அதிக விமர்சனத்திற்கும், அதிக சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கி இருந்தவர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ரோகித்தை மாற்றி விட்டு ஹர்திக் கேப்டனான நாள் முதல் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்து தான் வருகிறது. ஐபிஎல் போட்டி தொடங்கினால் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என பல கேள்விகள் இருந்த நிலையில் எப்படி நடக்கக்கூடாது என நினைத்தார்களோ அவை அனைத்துமே பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மும்பையின் முதல் போட்டியில் ஹர்திக் டாஸ் போட வந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ரசிகர்கள். அதே போல ஹர்திக் வரும் போதெல்லாம் ரோஹித், ரோஹித் என கத்தியதுடன் ஹர்திக்கிற்கு எதிரான குரல் தான் அதிகமாக இருந்தது. இதனை சில போட்டிகளில் கவனித்த ரோஹித், ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி தனது செய்கையால் அறிவுறுத்தி இருந்தார்.

அதே போல, பெங்களூர் அணிக்கு எதிராக கடைசியாக மும்பை மோதிய போட்டியிலும் விராட் கோலி, ரசிகர்களுக்கு சைகை காட்டி ஹர்திக்கிற்கு ஆதரவு கொடுக்கும்படியும் குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னது போலவே ரசிகர்களும் ஹர்திக், ஹர்திக் என தொடர்ந்து அவரை கொண்டாடி இருந்தது ஒரு சிறிய மாற்றமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனால் கோலி, ரோஹித்தின் அறிவுறுத்தல்களின் பெயரில் இனிமேல் ஹர்திக் மீது ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பை காட்ட மாட்டார்கள் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 14) சந்திக்கின்றனர். இதற்கிடையே ஹர்திக்கை சுற்றி மற்றொரு புதிய குழப்பமும் தற்போது வெடித்துள்ளது.

- Advertisement 2-

மும்பை அணி ஆரம்பத்தில் ஆடிய போட்டிகளில், முதல் ஓவரை வீசி இருந்த ஹர்திக் பாண்டியா, அதன் பின்னர் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக பந்து வீசவில்லை. இது பற்றிய கேள்விக்கு சரியான நேரத்தில் மீண்டும் பந்து வீசுவேன் என சூசகமாக கூறியிருந்தார் ஹர்திக்.

அப்படி இருக்கையில், இது பற்றி முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணணையாளருமான சைமன் டால் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சை அலைகளை உருவாக்கியுள்ளது. “திடீரென முதல் போட்டியில் பந்து வீசி, மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டு திடீரென அடுத்த போட்டிகளில் ஹர்திக் பந்து வீச வரவில்லை.

அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நான் உங்களிடம் ஒன்று சொல்கிறேன் அவரிடம் ஏதோ தவறாக உள்ளது. அவர் அதை ஒப்புக்கொள்ளாமல் மூடி மறைக்கிறார். ஆனால் அவரிடம் ஏதோ ஒரு தவறு இருப்பது உண்மை தான். என் உள்ளுணர்வு அப்படித்தான் சொல்கிறது” என சைமன் டால் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

சற்று முன்