- Advertisement -
Homeகிரிக்கெட்சச்சின் கூடவே என் வாழ்நாள் முழுசா ஆடியிருக்கேன்.. ஆனா யாராலும் முடியாததை விராட் கோலி செய்ஞ்சிருக்காரு...

சச்சின் கூடவே என் வாழ்நாள் முழுசா ஆடியிருக்கேன்.. ஆனா யாராலும் முடியாததை விராட் கோலி செய்ஞ்சிருக்காரு – கங்குலி பாராட்டு

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்திய அணியானது அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை அகமதாபாத் நகரில் இந்திய அணி சந்திக்க இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அட்டகாசமான பார்மில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த அரையிறுதி போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை பதிவு செய்த விராட் கோலி புகழின் உச்சத்தை தொட்டிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த அற்புதமான பயணம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கூறுகையில் : விராட் கோலி படைத்துள்ள இந்த 50 ஒருநாள் சதங்கள் போன்ற ஒரு சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியுமா? என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.

ஏனெனில் அவர் இன்னும் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிக்கவில்லை. தற்போது 35 வயதாகும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார். எனவே அவரால் மேலும் பல சதங்களை விளாச முடியும். என் வாழ்நாளில் நான் சச்சின் டெண்டுல்கருடன் தான் முழுமையாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.

-Advertisement-

அப்பொழுது சச்சின் 49 சதங்களை அடித்த வேளையில் இனி ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க முடியாது என்றே நினைத்தேன். ஆனால் தற்போது அதனை விராட் கோலி முறியடித்து காட்டி இருக்கிறார். அவருடைய ஆட்டம் இந்த உலகக் கோப்பை தொடரில் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை முழுவதுமே விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதேபோன்ற ஆட்டத்தை இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என அனைவரையுமே வாழ்த்துகிறேன் என்று கங்குலி கூறியிருந்தார். அவர் கூறியது போலவே : இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 5 அரைசதம் 3 சதம் என 711 ரன்கள் குவித்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்