- Advertisement -
Homeகிரிக்கெட்ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக மாற்ற இதுவே காரணம். நீண்ட நாள் கழித்து -...

ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக மாற்ற இதுவே காரணம். நீண்ட நாள் கழித்து – சவுரவ் கங்குலி விளக்கம்

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசியின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று தற்போது லீக் சுற்று போட்டிகள் முடியும் தருவாயில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளனர்.

நான்காவது இடத்திற்கான போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்னும் நீடித்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அரையிறுதியில் விளையாடப் போகும் நான்காவது அணி குறித்த முடிவும் வெளியாகும்.

இந்நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தங்கள் விளையாடிய 8 லீக் போட்டிகளிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்துள்ளது. கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி அதன்பிறகு அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை விளையாடி உள்ள எட்டு போட்டிகளில் இரண்டு அரைசதம், ஒரு சதம் என 442 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மாவை நான்தான் கேப்டனாக பொறுப்பேற்கும் படி கட்டாயப்படுத்தினேன் என பிசிசியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

-Advertisement-

இதுகுறித்து கூறுகையில் : ஆரம்பத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா விரும்பவில்லை. விருப்பமில்லாத அவரை நான் தான் கேப்டன் பொறுப்பை ஏற்கும் படி கட்டாயப்படுத்தினேன். மேலும் நீங்கள் ஓகே சொன்னால்தான் உங்களுடைய பெயரை அறிவிப்பேன் என்றும் ரோகித்திடம் கூறியிருந்தேன். அதன் பின்னரே அவரை கேப்டனாக நான் நியமித்தேன்.

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்த சிறந்த ஒரு மனிதர் ரோகித் சர்மா தான் என்று எனக்கு அப்போது தோன்றியது. அதன் காரணமாகவே அவரை நான் கேப்டனாக்க முடிவு செய்தேன். ஆரம்பத்தில் பணிச்சுமை காரணமாக அவர் அந்த பொறுப்பை மறுத்தாலும் அதன்பிறகு என் பேச்சை கேட்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடி வருவதில் மகிழ்ச்சி என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்