- Advertisement -
Homeகிரிக்கெட்இனிமே  ‘நோ ஹிட் ஷர்மா’னு பேர மாத்திக்கோ… உன்ன டீம்லயே எடுக்க மாட்டேன் – ரோஹித்...

இனிமே  ‘நோ ஹிட் ஷர்மா’னு பேர மாத்திக்கோ… உன்ன டீம்லயே எடுக்க மாட்டேன் – ரோஹித் ஷர்மாவ சீண்டிய சீக்கா!

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஆற்றல் இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 184 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரின் சராசரி 20+. ஸ்ட்ரைக் ரேட் 129 தான். அதிகபட்ச ஸ்கோர் 65 தான். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங் திறமை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

அவரால் இப்போதெல்லாம் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாட முடியவில்லை. அவரின் உடல் எடையும் அதிகமாகி தொந்தியும் தொப்பையுமாக காணப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட் (தொடர்ந்து இரண்டாவது முறை) ஆகி மிக மோசமான சாதனையைப் படைத்தார்.

அந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலமாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளார் ரோஹித். இதுவரை 237 போட்டிகள் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மாவுக்கு இது 16 ஆவது டக் அவுட் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் சுனில் நரைன், மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 முறை டக் அவுட் ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா பேட்டிங் பற்றி கடுமையாக விமர்சித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போது தமிழ் வர்ணனை செய்து வருபவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்  “அவர பெயரை ‘நோ ஹிட் ஷர்மா’ என்று மாற்றிக்கொள்ள வேண்டும். நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தால் அவரை விளையாடும் XI இல் கூட சேர்க்க மாட்டேன்” எனக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

-Advertisement-

ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தவரும், 5 முறை கோப்பையை வென்றவருமான ரோஹித் ஷர்மாவை பற்றி ஸ்ரீகாந்தின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த அளவுக்கு கடுமையான வார்த்தைகளை அவர் பேசி இருக்க வேண்டுமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-Advertisement-

சற்று முன்