- Advertisement -
Homeகிரிக்கெட்இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இதுமட்டும் தான் ஒரே வழி. இறுதிப்போட்டிக்கு முன்னர் -...

இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இதுமட்டும் தான் ஒரே வழி. இறுதிப்போட்டிக்கு முன்னர் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

-Advertisement-

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் என்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஒருபுறம் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வேளையில் மற்றொருபுறம் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு தோல்வியையே சந்திக்காமல் பலமான அணியாக உருவெடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி குறித்து தற்போது இரு அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வது குறித்து பிரத்தேக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியாவை இறுதிப்போட்டியில் எப்படி வீழ்த்தப் போகிறீர்கள்? என்று நீங்கள் கேட்பது ஒரு நல்ல கேள்வி. ஆனால் இதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி அவர்கள் விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

-Advertisement-

அதோடு இந்திய அணியின் பந்துவீச்சும் தற்போது பலம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே இந்தியாவை வீழ்த்த வேண்டுமெனில் நாங்கள் அவர்களை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தான் முடியும் இது மட்டும் தான் ஒரே வழி. மேலும் இறுதிப்போட்டியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்பு விளையாடப் போகிறோம் அந்தப் போட்டியை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எங்களது அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பாவிற்கு ஏற்றவாறு இந்த அகமதாபாத் மைதானம் இருக்கும் என்றும் நம்புகிறேன். நிச்சயம் இந்த போட்டியில் எங்களால் இந்திய அணிக்கு கடுமையான போட்டியை தர முடியும் என்றும் நம்புவதாக ஸ்டீவ் ஸ்மித் கூறினார். கடந்த 2003-ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்து தற்போது 20 ஆண்டுகள் கழித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்