- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனி டீம்ல நீங்க திரும்ப வரணும்னா.. ஷ்ரேயஸ், இஷானுக்கு ரோஹித் கொடுத்த வார்னிங்..

இனி டீம்ல நீங்க திரும்ப வரணும்னா.. ஷ்ரேயஸ், இஷானுக்கு ரோஹித் கொடுத்த வார்னிங்..

- Advertisement 1-

இந்திய அணி ஒரு பக்கம் இங்கிலாந்து தொடரை கைப்பற்றி இருந்தாலும் மறுபக்கம் சில வீரர்களை குறித்த விமர்சனங்கள் பரவலாக இருந்து வருகிறது. இந்திய அணி ஆடி வரும் கடந்த சில தொடர்களாகவே அணியில் தொடர்ந்து இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார் இஷான் கிஷன். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து மனச்சோர்வு காரணமாக விடுப்பு கேட்டுக் கொண்டு விலகிய இஷான் கிஷன், அதன் பின்னர் இந்திய அணிக்கு திரும்பவும் விருப்பமே இல்லாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி பேசிய டிராவிட் கூட இஷான் கிஷன் கொஞ்சம் கிரிக்கெட் ஆடி விட்டு அணியில் இணையலாம் என கூறியிருந்தார். இதனால் அவர் ரஞ்சியில் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக அவர் பயிற்சியை தொடங்கியிருந்தது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. அப்படி ஒரு நேரத்தில் தான் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் ஆட வேண்டும் என்றால் ரஞ்சி உள்ளிட்ட தொடர்களிலும் ஆடி இருக்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது.

இஷான் கிஷானை போலவே இங்கிலாந்து டெஸ்டில் மோசமாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயர், அணியில் இடம்பெறாததால் ரஞ்சித் தொடரில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு காயம் ஏற்பட்டதாக அதிலிருந்து விலக, பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமி அவரின் உடல்நிலை பற்றி வெளியிட்ட அறிக்கையில் எந்த காயமும் இல்லை என தெரிவித்திருந்தது. இதனால், ஷ்ரேயாஸ் பொய் சொன்னதாக அடுத்த சர்ச்சையும் இந்திய அணியை சுற்றி வெடித்தது.

அப்படி ஒரு சூழலில், இது பற்றி மறைமுகமாக பேசிய ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் அதிகம் பசியுடன் இருக்கிறார்களோ அவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இப்போது பலவீரர்களும் அதற்கு அதற்கான பசி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இளம் வீரர்கள் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆசைப்படும் நிலையில் சிலர் ஆர்வம் காட்டாமல் இருப்பதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார் என்றும் பலர் தெரிவித்து வந்தனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் ரோஹித் சொன்னது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ரோஹித் சொன்னது முற்றிலும் சரி. நான் பல வருடங்களாக இதை சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். அவர்கள் கிரிக்கெட் உலகில் சாதித்து பணம், புகழ் அனைத்தையும் அடைவதற்கு இந்திய கிரிக்கெட் தான் காரணமாக இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட்டிற்காக நீங்கள் கொஞ்சம் விசுவாசத்தையாவது காட்ட வேண்டும்.

ஆனால் அதை விட்டுவிட்டு ஏதாவது காரணங்களை சொல்லிக் கொண்டு இருந்தால் ரோஹித் சொன்னது போல அவர்களுக்கு அதற்கான பசியும் ஆர்வமும் இல்லாமல் இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்