- Advertisement 3-
Homeவிளையாட்டுஹைதராபாத் வெற்றியால் ராஜஸ்தானுக்கு வந்த ட்விஸ்ட்.. ஆர்சிபியுடன் மோத போவது யார்?..

ஹைதராபாத் வெற்றியால் ராஜஸ்தானுக்கு வந்த ட்விஸ்ட்.. ஆர்சிபியுடன் மோத போவது யார்?..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதில், முதல் இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 4 வது இடத்தை ஆர்சிபியும் உறுதி செய்து விட்டதால், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளில் 2 வது மற்றும் 3 வது இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் கேள்வி இருந்தது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் யார் முன்னேறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் இரண்டு லீக் போட்டிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடந்து முடிந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐந்து விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் மட்டுமே இடம் பிடித்திருந்த நிலையில் தொடக்க வீரர்களான அதர்வா 46 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 71 ரன்களும் எடுத்திருந்தனர். மேலும் கடைசி கட்டத்தில் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க, ஹைதராபாத் அணியின் பலமான பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி அவர்கள் 214 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சீசனின் அதிரடி வீரர் ஹெட் கோல்டன் டக்காகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இணைந்த அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க இருவரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தனர்.

- Advertisement 2-

இதில் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 66 ரன்கள் எடுத்து அவுட்டாக, ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதன் பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி மற்றும் கிளாஸன் ஆகியோரும் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க, 14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 76 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் கடைசி 6 ஓவர்களில் 39 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனாலும் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் கடைசி ஓவரின் முதல் பந்தில் தான் வெற்றி பெற்றனர். ஹைதராபாத் தற்போது 2 வது இடத்திற்கு முன்னேறினாலும், அடுத்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் 3 வது இடத்திற்கு இறங்கி விடுவார்கள். ஒரு வேளை ராஜஸ்தான் தோல்வி அடைந்தால், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள், குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்