- Advertisement -
Homeகிரிக்கெட்கடன் பிரச்னையால் மன உளைச்சல்... கடுமையாக கஷ்டப்பட்டேன்.. உடைத்து பேசிய சுரேஷ் ரெய்னா..

கடன் பிரச்னையால் மன உளைச்சல்… கடுமையாக கஷ்டப்பட்டேன்.. உடைத்து பேசிய சுரேஷ் ரெய்னா..

-Advertisement-

இந்திய அணிக்கு யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு கிடைத்த முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகம் ஆன ரெய்னா,  2020 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்தியன் பிரீமியர் லீக் 2008 இல் தொடங்கப்பட்டதில் இருந்து அதில் பங்கேற்ற அவர், கடந்த 2021 வரை தொடர்ந்து விளையாடினார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் 4 முறை கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ளார்

ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட் வடிவத்தில் 768 ரன்களையும், ODI வடிவத்தில் 35.3 சராசரியுடன் 5,615 ரன்களையும் எடுத்தார். T20I வடிவத்தில், அவர் 134.9 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,605 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் வீரர் சுரேஷ் ரெய்னா, 2007 ஆம் ஆண்டில், ரெய்னா முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட போது அதிலிருந்து மீண்டு வந்ததை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். இந்த காயம் காரணமாக, 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் காயம் அடைந்தபோது, ​​உடல்நிலையை விட மன உளைச்சல் என்னைப் பாதித்தது. என் குடும்பத்தினர் என்னை மீட்பதில் கவனம் செலுத்துமாறும், நான் வாங்கிய கடனைப் பற்றி கவலைப்படாமல் இருக்குமாறும் கேட்டுக் கொண்டனர். மற்றொன்று என்னைத் தின்று கொண்டிருந்தது. அது என்னவென்றால் மீண்டும் எனக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதே அது.” என்று ஜியோ சினிமா உரையாடலில் ரெய்னா கூறினார்.

-Advertisement-

மேலும் “பின்னர் நான் எனது விதியை கடவுளின் கைகளில் விட்டுவிட முடிவு செய்தேன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்தினேன், ஏனெனில் சில வருடங்களாக நான் ஒரு வருடத்தில் 10-20 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்ததில்லை. அதனால், என் குடும்பத்தாரின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன், நான் சில நாட்களை மழ்கிச்சியாக கழித்தேன்.

நான் கடன் வாங்கிய பிறகு, நானும் குடும்பமும் இருக்கும் நிதி நிலை குறித்து நான் அழுத்தத்தை உணர்ந்தேன். நான் மீண்டும் விளையாடவில்லை என்றால், எல்லாம் முடிந்துவிடும். அதை உணர்ந்தேன். என் முழங்காலை வலுப்படுத்துவதுதான் என் கட்டுப்பாட்டில் இருந்தது, மற்ற அனைத்தும் தானாக நடக்கும் என நினைத்துக் கொண்டேன்” என்று தான் மீண்டு வந்த கதையை பற்றி கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்