- Advertisement 3-
Homeவிளையாட்டுநீயெல்லாம் எப்படி ஃபினிஷரான.. சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.. மும்பையில் ஆடினால் மட்டும்...

நீயெல்லாம் எப்படி ஃபினிஷரான.. சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.. மும்பையில் ஆடினால் மட்டும் போதாது..

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

நிதானமாக ஆடிய கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதித்தது. ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இந்த அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்தது. குறிப்பாக கடைசி 40 ஓவர்களில் இந்திய அணி தரப்பில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஃபினிஷ் ரோலுக்காக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரை காப்பாற்ற ஜடேஜாவை 5வது வரிசையில் களமிறக்கி ரோகித் சர்மா ஒரு விக்கெட்டையும் தானம் கொடுத்தார் என்றே சொல்லலாம். அப்படியிருக்கும் சூர்யகுமார் யாதவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

- Advertisement 2-

டெய்லண்டர்களுடன் விளையாட போதிய அனுபவம் இல்லாத சூர்யகுமார் யாதவை ஃபினிஷ் ரோலில் களமிறக்கிவிட்டதே தவறான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் டெய்லண்டர்கள் எதிர்முனையில் நின்ற போது முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு ஓடியதை பார்த்து ரசிகர்களே கொந்தளித்தனர். அந்த அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட் என்றால் என்னவென்று புரியாமல் சூர்யகுமார் யாதவ் இருந்தார்.

அதேபோல் மும்பை மைதானங்களில் மட்டும் சிறப்பாக ஆடிய வீரர்கள் நல்ல தரமான பந்துவீச்சுக்கு எதிரான ஓரளவு பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் பிட்சில் சோபிக்க முடியவில்லை. இவையனைத்தும் சேர்ந்து இந்திய அணியின் உலகக்கோப்பையை கனவை மீண்டும் பறித்துள்ளது.

சற்று முன்