- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த ஒரு விஷயம் மட்டும் மிஸ் ஆயிடுச்சு.. மேட்ச் ஜெயிச்சும் ஃபீல் செய்த கேப்டன் சூர்யகுமார்...

அந்த ஒரு விஷயம் மட்டும் மிஸ் ஆயிடுச்சு.. மேட்ச் ஜெயிச்சும் ஃபீல் செய்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்

- Advertisement 1-

தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி 20 தொடர் பக்கம் தான் உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களால் தான். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி வரை தோல்வி அடையாமல் முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்திருந்தது.

ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தத்தில் இருந்தாலும், இதிலிருந்து மீண்டு வந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், இனி வரும் டி 20 தொடர்களில் இளம் வீரர்கள் ஆடும் விதமும் மிக முக்கியமானதாக பார்க்கப்டுகிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 4 வது டி 20 போட்டி நடந்து முடிந்த சூழலில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவில் ஹெட், அதிரடி தொடக்கத்தை கொடுத்தாலும் பின்னர் வந்த வீரர்கள் ரன் குவிக்கத் தவறினர்.

இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில், அக்சர் படேல் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும் ரன் குவிக்க திணறியது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் சொந்தமாக்கியது.

- Advertisement 2-

தொடரை கைப்பற்றிய பின் உற்சாகத்துடன் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “டாஸை தவிர அனைத்துமே மிக சிறப்பாக சென்றது. இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியது முக்கியமானதாக அமைந்தது. போட்டிக்கு முன்பாக பயமில்லாமல் உங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் மீட்டிங்கில் பேசி இருந்தோம்.

அக்சரை நெருக்கடியான சூழ்நிலையில் தள்ளுவது மிகவும் பிடிக்கும். அவர் இன்று பந்து வீசிய விதம் வியப்பாக இருந்தது. டெத் ஓவர்களின் போது யார்க்கர் பந்துகளை அதிகம் வீச வேண்டும் என திட்டம் போட்டு அதனை செயல்படுத்த நினைத்தோம்” என தெரிவித்தார்.

சற்று முன்