- Advertisement 3-
Homeவிளையாட்டுவாஷிங்டன் சுந்தருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கல... தொடர் முடிந்த பின் விளக்கம் கொடுத்த சூர்யகுமார் யாதவ்..

வாஷிங்டன் சுந்தருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கல… தொடர் முடிந்த பின் விளக்கம் கொடுத்த சூர்யகுமார் யாதவ்..

- Advertisement 1-

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டி 20 தொடரை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் படை, 4 – 1 என்ற கணக்கில் வென்று பட்டையைக் கிளப்பி உள்ளது. ரோஹித், கோலி, முகமது ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வில் இருந்த போதும் அவர்கள் இல்லை என்பது தெரியாத அளவுக்கு இந்திய அணியின் இளம் வீரர்கள் செயல்பட்டிருந்தனர். முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி கண்ட இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சதமடித்து பட்டையை கிளப்ப, வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவ நேரிட்டது.

இதற்கடுத்து இரு அணிகளும் மோதிய 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறவும் வழி செய்திருந்தார். அதே அக்சர் படேல், இன்று (03.12.2023) நடந்த கடைசி டி 20 போட்டியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒரு ஆல் ரவுண்டர் திறனை வெளிப்படுத்தி அசத்தினார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது. இருந்த போதிலும், ஷ்ரேயஸ் ஐயர் அற்புதமாக ஆடி ரன் சேர்த்தார். மேலும் கடைசி கட்டத்தில் அவருடன் இணைந்து ஜிதேஷ் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சொற்ப ரன்களை சேர்த்து சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதனால், 20 ஓவர்களில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணிக்கான இலக்கு குறைவாக இருந்த போதும், அவ்வளவு எளிதில் அவர்களை வெற்றி பெற விடமாட்டோம் என்ற தொனியில் இந்திய அணியினர் சிறப்பாக பந்து வீசினர். ரன் சேர்த்தாலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி யார் பக்கம் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இறுதியில், முகேஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையையும் சொந்தமாக்கியது.

- Advertisement 2-

கோப்பையை வென்ற பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது ஒரு நல்ல தொடராக அமைந்தது. அணி வீரர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. நாங்கள் பயமில்லாமல் ஆட விரும்பினோம். போட்டியின் நடுவே, ‘எது சரியோ அதை செய்யுங்கள், மிகவும் ரசித்து விளையாடுங்கள்’ என அணியினரிடம் அறிவுறுத்தினேன். அவர்களும் அதையே செய்தார்கள். மேலும் வாஷிங்டன் சுந்தர் இருந்திருந்தால் அது இன்னும் அதிகமான ஒரு தேவையாக தான் இருந்திருக்கும். சின்னசாமி மைதானத்தில் 200+ கூட எளிமையாக துரத்தக்கூடிய இலக்கு தான். 160 – 175 என்பதும் நல்ல இலக்கு தான். 10 ஓவர்கள் முடிந்ததும் நமக்கான போட்டி தொடங்கி விட்டது என அணியினரிடம் நான் கூறினேன்” என தெரிவித்தார்.

சற்று முன்