- Advertisement -
கிரிக்கெட்

அதுக்காகவா போய் இப்படி பண்ணாரு.. பேட்டிங்கில் டைவ் அடிச்ச நியூசி. வீரர்..

ஐபிஎல் போட்டிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி 20 தொடரும் பாகிஸ்தானில் வைத்து நடந்து முடிந்துள்ளது. ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தது.

இதனால் தொடரும் சமநிலையில் இருக்க நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்திருந்தது. நியூசிலாந்தின் டாப் 10 வீரர்கள் வரை இல்லாத போதிலும் இரண்டாம் கட்ட வீரர்களைக் கொண்டு பாகிஸ்தான் அணிக்கு அவர்கள் கொடுத்த அச்சுறுத்தல் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

- Advertisement -

அப்படி ஒரு நிலையில் தான் ஐந்தாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இரு அணிகளும் மோதி இருந்தனர். இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 178 ரன்கள் குவிக்க பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

அந்த அணியின் தொடக்க வீரர் டிம் சைபர்ட் அரைச் சதமடித்திருந்த போதிலும் மற்ற வீரர்கள் பங்களிப்பை அளிக்காததால் நியூசிலாந்து தோல்வி அடைய நேரிட்டிருந்தது. மேலும் இந்த வெற்றியால் டி 20 தொடரும் 2 – 2 என்ற கணக்கில் சமநிலை ஆகியுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் பந்து வீச்சாளர் விசிய பந்தில் டைவ் அடித்த டிம் சைஃபர்ட், அந்தரத்தில் பறந்து போனது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டியில் முகமது அமீர் வீசிய பந்தை எதிர்கொண்டார் டிம் சைபர்ட். அப்போது பந்து மிகவும் வைடாக செல்ல, அதனை எப்படியாவது அடிக்க வேண்டுமென்ற நோக்கில் பறந்து போய் அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து நல்ல வைடாக சென்றதால் அவரது பேட்டிலும் படவில்லை.

இருந்தும் அரைச் சதமடித்த டிம் சைபர்ட் பேட்டிங்கில் காட்டிய அர்ப்பணிப்பு, பலரையும் ஒரு நிமிடம் வியப்பு அடைய வைத்துள்ளது.

- Advertisement -

Recent Posts