- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபியை கலாய்த்து தேஷ்பாண்டே பகிர்ந்த பதிவு.. அடுத்த கொஞ்ச நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..

ஆர்சிபியை கலாய்த்து தேஷ்பாண்டே பகிர்ந்த பதிவு.. அடுத்த கொஞ்ச நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..

- Advertisement 1-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் மோதி இருந்ததை நிச்சயம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்த நிலையில் ஆர்சிபி ரசிகர்களின் ஆட்டமும் கொஞ்சம் ஓவராக தான் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 218 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு 201 ரன்கள் எடுத்தாலே பிளேஆப் சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலை தான் இருந்தது. ஆனாலும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 191 ரன்களில் சென்னை அணியை கட்டுப்படுத்தியிருந்தனர்.

பத்து ரன்களில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பொன்னான வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டதால் சிஎஸ்கே ரசிகர்கள் கலங்கி போயிருந்தனர். ஆனால் அதே வேளையில் இன்னொரு பக்கம் ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்த அனைத்து சிஎஸ்கே ரசிகர்களையும் ஓவராக அச்சுறுத்தியத்துடன் மட்டுமில்லாமல் தங்களின் வெற்றியை வைத்து அவர்களை அவமானப்படவும் வைத்திருந்தனர். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர்.

அப்படி இருக்கையில், ஆர்சிபி அணியின் தோல்விக்கு பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே ரசிகர்களும் காத்திருந்து வந்தனர். ஆனால் அதற்கு முதல் போட்டியிலேயே பலன் கிடைக்கும் என யாருமே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தங்களின் எலிமினேட்டர் போட்டியில் மோதி இருந்தது.

- Advertisement 2-

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 172 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி நடுவே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டாலும், 19 வது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இந்த மாதத்தில் வெற்றியே பெறாமல் இருந்து வந்த ராஜஸ்தான் முதல் முறையாக ஆர்சிபியை வீழ்த்தியுள்ளது.

தொடர்ந்து, அடுத்து நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளும் மோத உள்ளது. இதற்கிடையே லீக் போட்டியில் வென்றதை ஆக்ரோஷமாக கொண்டாடிய ஆர்சிபி வீரர்களை தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதிகமாக இணையத்தில் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே பெங்களூர் அணியை குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டோரி அதிகம் வைரலாகி வருகிறது. இதில், “Bengaluru Cant” என ஒரு ரயில்வே ஸ்டேஷன் பெயர் இருக்கும் புகைப்படத்தை ஒரு சென்னை அணியின் ரசிகர்கள் பகிர, இதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டார். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்திலேயே துஷார் தேஷ்பாண்டே நீக்கிவிட்டதாகவும் தெரிகிறது.

இருந்தாலும் இதனை ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட, தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

சற்று முன்