- Advertisement 3-
Homeவிளையாட்டுகம்பீர், ஷ்ரேயஸை தாண்டி கொல்கத்தா ஜெயிக்க காரணமா இருந்த 2 பேர்.. பலரும் கொண்டாட தவறிட்டாங்க..

கம்பீர், ஷ்ரேயஸை தாண்டி கொல்கத்தா ஜெயிக்க காரணமா இருந்த 2 பேர்.. பலரும் கொண்டாட தவறிட்டாங்க..

- Advertisement 1-

17 ஐபிஎல் சீசன் நடந்து முடிந்துள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பை கைப்பற்றி உள்ளது. கடந்த 2012 மற்றும் 14 ஆகிய சீசன்களில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தா அணி, அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகள் கழித்து தற்போது நடந்த தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்து கோப்பை சொந்தமாக்கி உள்ளது.

கடந்த இரண்டு சீசன்கள் கொல்கத்தாவுக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் இந்த சீசனில் மீண்டு வந்தவர்கள் மிகச் சிறப்பாக தங்களின் திறனை வெளிப்படுத்தி மற்ற அனைத்து அணிகளுக்கும் சவாலாகவும் விளங்கி இருந்தனர். கடந்த சீசனில் ஆடாமல் போன ஷ்ரேயஸ் ஐயர், இந்த முறை மீண்டும் அணியில் இணைந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், கவுதம் கம்பீர் ஆலோசராக திரும்பி வந்ததும் பெரிய சாதகமாக பார்க்கப்பட்டது.

இப்படி இவர்கள் இரண்டு பேரும் இணைய ஸ்டார்க், வைப் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ரசல், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பலரும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்க, மிக எளிதாகவும் ஹைதராபாத் அணியை இறுதி போட்டியில் சுருட்டி இருந்தனர்.

113 ரன்களில் ஹைதராபாத்தை கொல்கத்தா அணி கட்டுப்படுத்தி, இலக்கை 11 வது ஓவரில் எட்டிப் பிடித்து அபார சாதனையை புரிந்திருந்தது. இந்த வெற்றியால் கொல்கத்தா ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கும் அதே வேளையில் கம்பீர், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement 2-

ஆனால் இவர்கள் இரண்டு பேருக்கு நிகராக கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்த இரண்டு பேரை பற்றி பெரிய அளவில் பேசாமல் இருப்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயர், கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இருப்பதுடன் மட்டுமில்லாமல் பல இளம் வீரர்களையும் முதல் தர கிரிக்கெட்டின் கவனத்தின் பேரில் தங்கள் அணியில இணைத்து தயார் செய்து வருகிறார்.

இந்த வெற்றிக்கு பின்னர் பேசியிருந்த கொல்கத்தா வீரர்கள் பலரும் அபிஷேக் நாயரின் அர்பணிப்பை தான் பெரிய அளவில் பாராட்டி இருந்தனர். அபிஷேக் நாயரை போலவே கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண். இவர் தமிழ்நாடு கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்து பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியிலும், முதன்மை பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி U 19 உலக கோப்பை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் பரத் அருண் தான். பின்னர் 2014 ஆம் ஆண்டு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக களமிறங்கிய அவர் பல வீரர்கள் சிறப்பாக தங்களின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் காரணமாக இருந்தார்.

இவர் தற்போது கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பதுடன் கடந்த இரண்டு சீசன்கள் கைகூடாமல் போன விஷயங்கள் இந்த முறை கைகூடி, அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்