- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் உங்கள விட அந்த விஷயத்துல பெஸ்ட்டு.. நம்பர் 1 பவுலர் பும்ராவிற்கு சவால் விட்ட...

நான் உங்கள விட அந்த விஷயத்துல பெஸ்ட்டு.. நம்பர் 1 பவுலர் பும்ராவிற்கு சவால் விட்ட 17 வயது வீரர்..

- Advertisement 1-

முன்பு எல்லாம் சர்வதேச அணிக்காக ஆட வேண்டுமென்றால் தொடர்ந்து கடின உழைப்பை போட்டுக் கொண்டிருப்பதுடன் ரஞ்சி தொடர், U 19 உலக கோப்பை தொடர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விராட் கோலி, ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல வீரர்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி அதன் மூலம் இந்திய அணிக்காக ஆடத் தேர்வானவர்கள் தான்.

அந்த வகையில், இந்தியா மட்டும் இல்லாமல் பல நாடுகளிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்கு U 19 உலகக் கோப்பை தொடர் முக்கிய பங்காற்றி வருகிறது. அதே போல, சமீப காலமாக சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் U 19 உலக கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பல வீரர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி அவர்கள் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 285 ரன்கள் எடுக்க இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள 17 வயதே ஆகும் க்வேனா மகாபா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கும் வழி வகுத்திருந்தார்.

இவர் இந்திய அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை போன்று விக்கெட் எடுத்த பின்னர் தனது வெற்றியை கொண்டாடிய நிலையில் இது பற்றி அவர் பேசுகையில், “உலக கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாக விக்கெட் எடுத்தால் எப்படி கொண்டாட வேண்டும் என்று என்னுடைய சகோதரரிடம் நான் கேட்டிருந்தேன். எனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்று அவர் சொன்ன பதிலையே கொண்டாட்டமாக ஈடுபடுத்தலாம் என எனக்கு பின்னர் தோன்றியது.

- Advertisement 2-

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு இது சிறந்த வழியாக இருந்தது. எங்களின் திறமை பற்றி அறிந்து கொண்ட சூழலில், அதனை செயல்படுத்துவதற்காக தான் காத்திருந்தோம்” என மபாகா தெரிவித்தார். மேலும் பும்ரா போல, எனக்கு தெரியாது என்ற சைகையில் மபாகா விக்கெட்டை கொண்டாடுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “பும்ரா நீங்கள் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் தான். ஆனால் நான் உங்களை விட சிறந்தவன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ள.

வெறும் 17 வயதே ஆகும் வீரர் ஒருவர் உலக அரங்கில் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ராவை பார்த்து இப்படி ஒரு கருத்து தெரிவித்துள்ள சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

சற்று முன்