- Advertisement 3-
Homeவிளையாட்டுகெட்ட வார்த்தையால் வந்த சண்டை.. விடியக்காலை 3 மணிக்கு.. 3 வருஷம் கழிச்சு மன்னிப்பு கேட்ட...

கெட்ட வார்த்தையால் வந்த சண்டை.. விடியக்காலை 3 மணிக்கு.. 3 வருஷம் கழிச்சு மன்னிப்பு கேட்ட கோலி..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி கண்ட நம்பர் 1 நட்சத்திர வீரராக மாடர்ன் கிரிக்கெட்டில் உருவெடுத்தவர் விராட் கோலி. U 19 உலக கோப்பைத் தொடரில் கோலி தலைமையில் ஆடிய இந்திய அணி, கோப்பையை வென்று சாதனை புரிந்திருந்தது. அப்போதே கோலியின் கேப்டன்சி மட்டுமில்லாமல் பேட்டிங்கும் கூட பெரிய அளவில் கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்திருந்தது.

இதன் காரணமாக, ஐபிஎல், சர்வதேச போட்டிகள் என இரண்டிலும் தொடர்ந்து ஆடி வரும் விராட் கோலி, கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வருகிறார். இதே போல, இந்திய அணிக்கு எதிராக மோதும் சூழல் வந்தால் அங்குள்ள பந்து வீச்சாளர்கள் கோலியை பார்த்து பதறுவதுடன் அவரது விக்கெட்டை வீழ்த்துவதை தான் மிகப் பெரும் குறிக்கோளாக கருதி ஆடுவார்கள்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்படி இருக்குமோ அதே போன்றதொரு பெயரை அவரின் சாதனையை உடைத்து புது சரித்திரம் படைத்து வரும் விராட் கோலியும் எடுத்துள்ளார். ஒரு சில ஆண்டுகள் கோலியின் பேட்டிங், அதிக விமர்சனங்களை சந்தித்திருந்தது. தொடர்ந்து, பல தொடர்களில் அவர் ஃபார்ம் இல்லாமல் இருந்ததால் இளம் வீரர்களுக்கு அவர் வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என்ற விமர்சனமும் கூட எழுந்திருந்தது.

ஆனால் அதில் இருந்து மீண்டு வந்த கோலி, டி 20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை என அனைத்திலும் ரன் மெஷின் தான் என்பதை நிரூபித்து விமர்சனத்தை ஆஃப் செய்திருந்தார். அப்படி கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக இருக்கும் கோலி பற்றி, தெ. ஆ அணியின் முன்னாள் வீரர் டீன் எல்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த தென்னாபிரிக்க வீரர் டீன் எல்கர், சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். இவர் தற்போது விராட் கோலியுடன் நட்பு உருவானது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான் பேட்டிங் இறங்க வந்த போது, கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் என்னை சீண்ட பார்த்தனர். அப்போது நான் அவரை தென் ஆப்பிரிக்க மொழியில் சில கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினேன். ஏபி டிவில்லியர்ஸ் கோலியின் நண்பர் என்பதால் நான் பேசியது அவருக்கு புரிந்தது. அதே போல, டிவில்லியர்ஸ் கூட விராட் கோலியிடம் சென்று ஏன் எனது அணி வீரரிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றும் கோலியிடம் கேட்டார். அப்போது போட்டி இந்தியாவில் நடந்ததால் நான் சற்று எச்சரிக்கையாக தான் அதனை எதிர் கொண்டேன்.

சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து நாங்கள் சவுத் ஆப்பிரிக்காவில் ஆடிக் கொண்டிருந்த போது கோலி என்னை தனியாக அழைத்து தொடர் முடிந்த பின்னால் சேர்ந்து குடிக்கலாமா என்று கேட்டார். அத்துடன் தான் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட, அந்த சமயத்தில் அதிகாலை 3 மணி வரை இருவரும் குடித்தோம்” என டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இப்படி கோலி மற்றும் டீன் எல்கர் நட்பு உருவான சூழலில், ஓய்வு பெற்ற எல்கருக்கு கையொப்பமிட்ட தனது இந்திய ஜெர்சியை அவர் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்