- Advertisement 3-
Homeவிளையாட்டுஆஸ்திரேலியா ஜெயிச்ச மறுகணமே.. சோகத்தில் விராட் கோலி செஞ்ச விஷயம்.. பல நாள் கழிச்சு தெரிய...

ஆஸ்திரேலியா ஜெயிச்ச மறுகணமே.. சோகத்தில் விராட் கோலி செஞ்ச விஷயம்.. பல நாள் கழிச்சு தெரிய வந்த உண்மை

- Advertisement 1-

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி எப்படி இந்திய ரசிகர்களால் பல ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாதோ, அதே வேளையில் அவர்கள் வேகமாக மறக்கக்கூடிய ஒருநாள் தான் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி. இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த உலக கோப்பையின் இறுதி போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. லீத் தொடர்களில் 9 அணிகளையும் தாறுமாறாக வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டியிலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை மிக எளிதாக வீழ்த்தி இருந்தது.

தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றி உச்சி முகரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்தனர். ஆனால் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அத்தனையும் தலைகீழாக திருப்பிப் போட்டவுடன் இந்திய அணிக்கும் பலமான அடியை விழ வைத்திருந்தது.

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. கடைசி வரைக்கும் நம்பிக்கையுடன் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் இறுதியில் மிஞ்சி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் தோல்வி அடைந்த சமயத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் கண்ணீர் வடித்து இருந்தது ரசிகர்களை இன்னும் மனம் நொறுங்க செய்திருந்தது.

ஒரு பக்கம் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இருப்பார்களா என்ற கேள்வி சுற்றிவர இன்னொரு பக்கம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலான போதிலும் அதிலிருந்து பல ரசிகர்களால் மீண்டு வரவே முடியவில்லை.

- Advertisement 2-

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மறுகணமே களத்தில் விராட் கோலி செய்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 765 ரன்களை 95 சராசரியில் எடுத்திருந்தார். ஆனாலும் உலக கோப்பையை அவர் தொட முடியாமல் முடியாமல் போனது அவருக்கே நிச்சயம் பெரிய அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும்.

அப்படி இருக்கையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற மறுகணமே களத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி மிகுந்த சோகத்தில் ஸ்டம்ப் அருகே சென்று அங்கே இருந்த பைல்ஸை சோகத்துடன் கீழே தட்டி விட்டார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வரும் சூழலில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்