- Advertisement -
Homeவிளையாட்டு2011 வேர்லடுகப் மாதிரியே இம்முறையும் இந்திய அணிக்கு அது தேவை - வீரேந்திர சேவாக் கருத்து

2011 வேர்லடுகப் மாதிரியே இம்முறையும் இந்திய அணிக்கு அது தேவை – வீரேந்திர சேவாக் கருத்து

- Advertisement-

கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் உலககோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு தற்போது மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஒரு பொன்னான வாய்ப்பு கையில் காத்திருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதியில் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி விட்டால் நிச்சயம் இறுதி போட்டியில் எந்த அணியுடன் விளையாடினாலும் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 2011-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் : இந்திய அணிக்கு இந்த கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற சற்று அதிர்ஷ்டமும் தேவை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி மூன்று நாக் அவுட் போட்டிகளில் விளையாடியிருந்தது. அந்த மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை என மூன்று அணிகளையும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இருந்தோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் யுவ்ராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் இந்திய அணியை காப்பாற்றினர்.

- Advertisement-

அதேபோன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாம் 260 ரன்கள் மட்டுமே அடித்து அடித்து இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் நம்மை பாதுகாத்தனர். இறுதி போட்டியில் தோனி மற்றும் கம்பீர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி காரணமாக இருந்தனர். இப்படி 2011-ஆம் ஆண்டு நாம் பெற்ற வெற்றிகளில் எல்லாம் உழைப்பும், அதிர்ஷ்டமும் இரண்டும் இருந்தது.

அதேபோன்று இம்முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், அதனை தொடர்ந்து வரும் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற இந்திய அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தற்போதுள்ள நமது அணியின் வீரர்கள் மிகவும் பலம் வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். அதோடு கூடுதலாக கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாம் கோப்பையை வெல்வது உறுதி என வீரேந்தர் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்