- Advertisement 3-
Homeவிளையாட்டு37 வயதில் வார்னர் பீல்டிங்கை பாருங்க.. இந்திய மண்ணில் அவர்களுக்கு எதிராக இறுதிப்போட்டி.. ஆவலாக உள்ளோம்.....

37 வயதில் வார்னர் பீல்டிங்கை பாருங்க.. இந்திய மண்ணில் அவர்களுக்கு எதிராக இறுதிப்போட்டி.. ஆவலாக உள்ளோம்.. பேட் கம்மின்ஸ் பேட்டி

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு 8வது முறையாக தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலமாக இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் காரணமாக நவ.19ஆம் தேதி அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.

இந்த வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியயா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசும் போது, டக் அவுட்டில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்கும் போது சொல்ல முடியாத அளவிற்கு பதற்றம் இருந்தது. ஆனால் களமிறங்கிய போது கொஞ்சம் குறைந்த அளவிலேயே பதற்றம் இருந்தது. பதற்றத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் விளையாடியதால், வெற்றி கிடைத்தது.

கொல்கத்தா மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். ஆனால் வானிலை மேகமூட்டத்துடன் இருந்ததால், டாஸில் தோற்று பந்துவீசியது பெரிதாக ஏமாற்றமாக இல்லை. அதேபோல் ஸ்டார்க் மற்றும் ஹசல்வுட் இருவருக்கும் அவ்வளவு வேகமாக அட்டாக்கில் இருப்பார்காள் என்று எதிர்பார்க்கவில்லை. ஃபீல்டிங் பொறுத்தவரை தொடக்க போட்டிகளில் சொதப்பி கொண்டே இருந்தோம்.

- Advertisement 2-

ஆனால் இன்றைய போட்டியில் சிறப்பாக செய்தோம். அதிலும் வார்னர் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார். 37 வயதில் ஃபீல்டிங் செய்தது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல் பவுலிங்கில் ஹெட் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். பேட்டிங்கை பற்றி சொல்லவே தேவையில்லை. அதேபோல் இங்கிலிஸும் சிறந்த கட்டுப்பாட்டுடன் பேட்டிங்கில் ஈடுபட்டார்.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சில வீரர்கள் விளையாடி இருக்கிறோம். அதேபோல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் விளையாடி இருக்கிறோம். இதனால் இந்த இறுதிப்போட்டியில் ஆடுவதற்கு ஆவலாக உள்ளோம். நிச்சயம் அகமதாபாத்தில் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு தான் இருக்க போகிறது. மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை இறுதியில் விளையாடுவதற்கு ஒரு அணியாக ஆவலாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

சற்று முன்