- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய ரசிகர்களை கையாள்வது எப்படி? ரிக்கி பாண்டிங் ஸ்டைலை பின்பற்றும் கம்மின்ஸ்.. ரசிகர்களுக்கு ஓபன் சவால்

இந்திய ரசிகர்களை கையாள்வது எப்படி? ரிக்கி பாண்டிங் ஸ்டைலை பின்பற்றும் கம்மின்ஸ்.. ரசிகர்களுக்கு ஓபன் சவால்

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்கும். அதேபோல் ஆஸ்திரேலிய அணி வென்றால் 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதிக்கும்.

இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த போட்டி இந்திய அணியின் பவுலர்களுக்கும் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கம்மின்ஸ் கூறும்போது, அகமதாபாத் மைதானத்தின் பிட்சை பொறுத்தவரை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடிய பழைய பிட்ச் தான் இறுதிப்போட்டிக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இதனால் பிட்ச் ஸ்லோ பிட்சாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அதேபோல் எங்கள் அணியை பற்றி அவர்களுக்கும், இந்திய அணியை பற்றி எங்களுக்கும் நன்றாக தெரியும்.

தொடர்ச்சியாக இரு அணிகளும் விளையாடி வருகிறோம். இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் அந்த அணியின் பவுலிங் அட்டாக் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக முகமது ஷமி தாமதமாக உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பை பெற்றாலும், சிறப்பாக செயல்பட்டு கவனத்தை திருப்பியுள்ளார்.

- Advertisement 2-

மேலும் அகமதாபாத் மைதானத்தில் 1.3 லட்சம் ரசிகர்கள் போட்டியை பார்க்க வரவுள்ளார்கள். நிச்சயம் அவர்களின் ஆதரவு ஒன் சைடாக தான் இருக்க போகிறது. ஆனால் விளையாட்டை பொறுத்தவரை 1.3 லட்சம் மக்கள் கூட்டத்தை அமைதியாக்குவ்பதை விட வேறெதுவும் அதிக மனநிறைவை தராது. அதை நிறைவேற்றுவதே நாளை எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி ரசிகர்களை எப்படி கையாள்கிறீர்கள் என்று ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ட போது, நான் பவுண்டரி அடிக்கும் போது ஒவ்வொரு முறையும் இந்திய மைதானங்களில் ரசிகர்களின் கரகோஷம் மொத்தமாக குறையும். அப்படி குறையும் போது எனது மன உறுதி அதிகமாகும். எப்போதெல்லாம் அவர்களின் கரகோஷம் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் பவுண்டரி அடிப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்