- Advertisement 3-
Homeவிளையாட்டுகிரிக்கெட் ரசிகர் கொடுத்த புகார்... பிசிசிஐ மீது பாய்ந்த வழக்கு... நேரில் ஆஜர் ஆகும்படி நோட்டீஸ்...

கிரிக்கெட் ரசிகர் கொடுத்த புகார்… பிசிசிஐ மீது பாய்ந்த வழக்கு… நேரில் ஆஜர் ஆகும்படி நோட்டீஸ்…

- Advertisement 1-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தி வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் ஏராளமானவை யாரும் எதிர்பாராத முடிவுகளை கொடுத்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கின்றன. போட்டிகள் எந்த அளவுக்கு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவு பலருக்கும் நிச்சயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்களில் பலர் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகளை வாங்குவதில் அதிக சிரமம் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். ஆன்லைனில் நடைபெறும் டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் விர்ச்சுவல் முறையில் வரிசையில் காக்க வைக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் அவை விற்றுத் தீர்ந்ததை காண்பிக்கும் தகவலை மட்டுமே பார்க்க முடிவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது எட்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த போட்டி நவம்பர் 5-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொல்கத்தாவில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கும் இந்திய போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் பொது மக்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று ரசிகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் புக்மைஷோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த புகாரில், பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளை பி.சி.சி.ஐ., வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் புக்மைஷோ கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

- Advertisement 2-

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கும் கொல்கத்தா காவல் துறை வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் புக்மைஷோ தரப்பு அலுவலர்களை நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அளித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக ஏராளமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மேலும் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளை ரசிகர்கள் நேரில் பார்க்க முடியாத சூழலும் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் டிக்கெட் கிடைக்காதது பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சற்று முன்