- Advertisement 3-
Homeவிளையாட்டுநியூசிலாந்து தோல்வியால் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள செம வாய்ப்பு... இது மட்டும் நடந்தா பாக் செமி பைனல்...

நியூசிலாந்து தோல்வியால் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள செம வாய்ப்பு… இது மட்டும் நடந்தா பாக் செமி பைனல் வாய்ப்பு கன்பார்ம்

- Advertisement 1-

உலகின் தலைசிறந்த அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடரில் எதுவும், எப்ப வேண்டுமானாலும் நடக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மாறியிருக்கிறது. உலகின் நம்பர் ஒன் ஒருநாள் கிர்க்கெட் அணியாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய போதிலும், தொடரின் லீக் போட்டிகள் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களே எதிர்பாராத வகையில் அமைந்துவிட்டது.

பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடி இருக்கும் ஏழு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா என்ற நிலை உருவாகி இருந்தது. தொடரின் நான்கு போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, கடைசியாக வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டி மூலம் வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

மேலும், நேற்றைய (நவம்பர் 1) போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பாகிஸ்தான் அணிக்கு நற்செய்தியை கொடுத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய புள்ளிகள் பட்டியலின் படி தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியும இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement 2-

இதன் மூலம் அந்த அணி அடுத்து விளையாட இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேற முடியும். பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. நான்காவது இடத்திற்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் போட்டியிடும் முனைப்பிலேயே உள்ளன.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் கடந்த போட்டியின் மூலம் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். அதே போல பந்துவீச்சை பொருத்தவரை ஷாகீன் ஷா அஃப்ரிடி மிரட்டி வருகிறார். இவருக்கு முகமது வாசிம், ஹாரிஸ் ரவுஃப் ஒத்துழைக்கும் பட்சத்தில் எதிரணி பேட்டர்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்