- Advertisement 3-
Homeவிளையாட்டுநம்பிக்கையே போச்சி.. எல்லாத்தையும் மாத்துறது கஷ்டம்... சேந்து விளையாட முடியல - தோல்விக்கு பிறகு ஷகிப்...

நம்பிக்கையே போச்சி.. எல்லாத்தையும் மாத்துறது கஷ்டம்… சேந்து விளையாட முடியல – தோல்விக்கு பிறகு ஷகிப் பேச்சு

- Advertisement 1-

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை போன்றே வங்காளதேசம் அணியும் இதுவரை ஆடிய போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் புள்ளிகள் பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

லீக் தொடரில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடிய வங்காளதேசம் அணி ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பெற்றது. ஆரம்பம் முதலே அதிக தோல்விகளை சந்தித்த நிலையில், நேற்றைய போட்டியில் வங்காளதேசம் அணி மீண்டு எழுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எனினும், வங்காளதேசம் அணி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எட்டாக்கனியாக மாறிப்போனது. நேற்றைய போட்டி குறித்து வங்காளதேசம் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும் போது, “போதுமான ரன்கள் கிடைக்கவில்லை, விக்கெட் சிறப்பாகவே இருந்தது, நாங்கள் மீண்டும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன, ஆனாலும் அவை பெரியதாக மாறவில்லை. பேட்டிங்கில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.”

“பாகிஸ்தானை பாராட்டியே ஆகவேண்டும். முதல் 10 ஓவர்களில் அவர்களின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனது பேட்டிங் நிலை குறித்து யோசனை செய்ய வேண்டியுள்ளது. முதல் நான்கு பேட்டர்களிடம் இருந்து அதிக ரன்கள் கிடைக்கவில்லை. நானும் டாப் ஆர்டரில் தான் பேட்டிங் செய்தேன், ஆனால் என்னால் அதிக ரன்களை அடிக்க முடியவில்லை. என்னிடம் நம்பிக்கை குறைவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக சில ரன்கள் கிடைத்தன, தற்போது சிறப்பாக உணர்கிறேன்.”

- Advertisement 2-

“இந்த சூழலில், அதிக விஷயங்களை மாற்றிக் கொள்வது கடினமாகிவிடும். தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும். நாங்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். அணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஆனால் அது நடைபெறாமலேயே உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் மீண்டு எழுவோம் என்று நம்புகிறேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களிடம் புன்னகையை கொண்டுவர நாங்கள் எதையாவது அவர்களுக்கு திருப்புக் கொடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

சற்று முன்