- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பையில் அடைந்த ரணம்.. காயங்கள் ஆருவதற்கு சில மாதங்களாகும்.. இன்னும் வலிக்கிது.. சூர்யகுமார் யாதவ் பேட்டி

உலகக்கோப்பையில் அடைந்த ரணம்.. காயங்கள் ஆருவதற்கு சில மாதங்களாகும்.. இன்னும் வலிக்கிது.. சூர்யகுமார் யாதவ் பேட்டி

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா அணி மேத்யூ வேட் தலைமையிலும், இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் களமிறங்கவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்குவதால், இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் டாப் 5 வரிசையில் மட்டும் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இல்லாததால், முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவமும் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து சூர்யகுமார் யாதவ் பேசும போது, உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியால் ஏற்பட்ட காயம் மறைவதற்கு இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.

உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக அணியை வழிநடத்தினார். அவரின் செயல்பாடுகளின் வழியாக பேசிக் கொண்டே இருந்தார். இந்திய அணி மீட்டிங்கில் என்ன பேசுகிறாரோ, அதனைதான் மைதானத்தில் செயல்படுத்தினார். ஒரு தலைவனுக்குரிய மதிப்புடன் எங்களை வழிநடத்தி சென்றார். அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளது.

- Advertisement 2-

இளம் வீரர்களிடம் ஒன்றை மட்டுமே சொல்கிறேன். சொந்த சாதனைகளுக்காக எப்போதும் விளையாடாமல், அணிக்காக விளையாடுங்கள். அணியை முன்னிலைப்படுத்துங்கள் என்பதுதான். மைதானத்தில் யாருக்கும் அச்சமின்றி சிறப்பாக விளையாடுங்கள். களத்தில் என்ன தோன்றுகிறதோ, அதற்கேற்ப உடனடியாக முடிவு செய்து விளையாடுங்கள் என்பது தான்.

ஐபிஎல் தொடரில் அணிக்காக எப்படி விளையாடினீர்களோ, அப்படியே ஆடுங்கள். வழக்கம் போல் களத்தில் கிரிக்கெட்டை ரசித்து ஆட வேண்டும். அதனை மட்டுமே வலியுறுத்துகிறேன். மற்றபடி எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று முயற்சிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்