- Advertisement -
Homeகிரிக்கெட்தோனி எனக்கு சொன்ன சீக்ரெட் இது தான். ஆனா அதுக்கெல்லாம் ரொம்ப பொறுமை தேவை. யஷஸ்வி...

தோனி எனக்கு சொன்ன சீக்ரெட் இது தான். ஆனா அதுக்கெல்லாம் ரொம்ப பொறுமை தேவை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் பகிர்ந்த தகவல்

-Advertisement-

யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ற பெயர் சமீபத்திய மாதங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ளது. மும்பைக்காக ரஞ்சி டிராபி 2023 இல் சிறப்பாக செயல்பட்ட அவர், அதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் அழுத்தமாக தன் பெயரை தடம் பதிக்கும் இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 14 ஆட்டங்களில் 163.61 ஸ்டிரைக் ரேட்டில் 625 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். இந்த ஆண்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடிய இளம் வீரர்களில் ஒருவராக இவர் ஜொலித்தார்.

இந்த சிறப்பான தொடர்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட்-பை வீரராக ஜெய்ஸ்வால் இடம்பிடித்தார். இந்நிலையில் இப்போது 21 வயதான ஜெய்ஸ்வால்  ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டதன் மூலம், முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ஆதர்ச வீரர்களில் ஒருவரான தோனியை முதன் முதலில் சந்தித்தது குறித்து பேசியுள்ள ஜெய்ஸ்வால் “என் வாழ்க்கையில் அது ஒரு சிறந்த தருணம். தோனியை நான் முதன்முறையாக நெருக்கமாகப் பார்த்தேன். ஐபிஎல்க்கு நடுவில் அவருடன் உரையாட முயற்சித்தேன். அவர் என்னிடம் ‘என் மீது நம்பிக்கை வைக்க சொல்லியும், என் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும்’ சொன்னார். இவை எளிமையானவை, ஆனால் நிஜ வாழ்க்கையில் செய்வது மிகவும் கடினம். அதற்கு உங்களுக்கு மிகவும் பொறுமை தேவை” என்று பரவசத்தோடு கூறியுள்ளார்.

-Advertisement-

மேலும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய அவர் “நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். மற்ற விஷயங்களைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. எனது கிரிக்கெட்டை மேம்படுத்தும் விஷயங்கள் இருந்தால், நான் அதை செய்வேன். நான் விளையாட்டை மதிக்கிறேன், நான் எப்பொழுதும் கனவு காணும் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறேன். மேலும் எனது திறமையால் ரசிகர்களை மகிழ்விக்கவும் மகிழ்ச்சியை பரப்பவும் முடிந்தால், அது மிகவும் நல்லது,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

மேலும் “ஆஹா, யஷஸ்வி, நீங்கள் என்ன ஷாட் விளையாடினீர்கள்”, ‘என்ன கேட்ச் பிடித்தீர்கள் அல்லது ‘என்ன சூப்பராக ரன் அவுட் செய்தீர்கள்’ என்று யாராவது சொன்னால், அது எனக்கு கிடைத்த வரம். நான் அடக்கமாக இருந்து எனது விளையாட்டை அனுபவிக்க விரும்புகிறேன். கடவுள் எனக்கு வழங்கியதை நான் மதிக்கிறேன், அதை அமைதியாக முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

-Advertisement-

சற்று முன்