- Advertisement -
Homeசினிமாஉடல் எடையை சிக்கென்று குறைத்த அஜித்! இணையத்தில் கசிந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

உடல் எடையை சிக்கென்று குறைத்த அஜித்! இணையத்தில் கசிந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

-Advertisement-

அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது பலரும் அறிந்த செய்தியே. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் தனது பைக் சுற்றுலாவை தொடங்கவுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் உலகம் முழுவதும் பயணிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக் சுற்றுலா சென்ற அஜித்குமார், பூடான், நேபாள் ஆகிய நாடுகளில் சுற்றிவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்தடைந்தார்.

தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகளுக்காக தயாராகி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை அக்டோபருக்குள் முடித்துவிட்டு நவம்பர் மாதம் உலக சுற்றுலா கிளம்பவுள்ளார். இந்த பைக் சுற்றுலாவிற்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவை முடித்த பிறகுதான் தனது 63 ஆவது திரைப்படத்தை குறித்த பணிகளில் அஜித் ஈடுபடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஏகே மோட்டோ ரைடு என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அஜித் தனது மேனேஜரின் மூலம் அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

-Advertisement-

இந்த நிலையில் தற்போது இணையத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துக்கொண்டு வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தில் அஜித், உடல் எடை குறைவாக காணப்படுகிறார். கேரளாவில் ஒரு ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-Advertisement-

சற்று முன்