- Advertisement -
Homeசினிமாமுதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள், வைரல் புகைப்படங்கள்…

முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள், வைரல் புகைப்படங்கள்…

-Advertisement-

ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக ஜப்பான் நாட்டை சொல்லலாம். ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்கள் ஜப்பானில் மெகா ஹிட் ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த “முத்து” திரைப்படம் ஜப்பானில் 500 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

ஜப்பானில் உள்ள தமிழ்நாட்டு மக்கள்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தால் அழித்துவிடுங்கள். அதாவது ஜப்பான் நாட்டு குடிமக்கள்தான் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். எனினும் இதுதான் உண்மை. அந்தளவுக்கு ரஜினிகாந்தின் கரிஷ்மா வேலை செய்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூருக்கு அரசு முறை பயணமாக சென்று அங்குள்ள தொழில் முனைவர்களை சந்தித்து தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகிற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்துள்ளார்கள். இது முதல்வருக்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஜப்பான் ரஜினி ரசிகர்களின் வரவேற்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

-Advertisement-

ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்