ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்வளவு கோடி வியாபாரமா? டெரர் காட்டும் கங்குவா படக்குழு…

- Advertisement -

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் மசாலா இயக்குனர்களுள் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். “சிறுத்தை”, “வீரம்”, “விஸ்வாசம்” ஆகிய மாபெரும் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து ரஜினியை வைத்து “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கினார் சிவா. அத்திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் சிறுத்தை சிவா பாணியில் மிகவும் ரசிக்கத்தக்க திரைப்படமாகவே அமைந்தது.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று ஒரு தகவல் பரவி வந்தது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. மேலும் அத்திரைப்படம் வரலாற்றுத் திரைப்படம் எனவும் கூறப்பட்டது.

- Advertisement -

இதனை உறுதி செய்யும் விதமாக சில மாதங்களிலேயே இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல மாதங்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதாவது “கங்குவா” என்ற டைட்டிலுடன் மிக அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது.

“கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். மிகவும் பிரம்மாணடமான பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே பத்து மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படமாக சாதனை படைக்கவுள்ளது கங்குவா.

- Advertisement -

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திசா படானி, மிர்ணால் தாக்கூர் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் யோகி பாபு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கேரியரிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டுடன் எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பு என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் “கங்குவா” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.80 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமே இந்த வியாபாரம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வெளியீட்டுக்கு முன்பே இத்திரைப்படம் ரூ.80 கோடி லாபம் பார்த்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்