- Advertisement -
Homeசினிமாபன்முக கலைஞர் மனோபாலா நம்மை விட்டுப் பிரிந்தார்… இவர் இயக்கிய படங்கள் மட்டும் இவ்வளவா?

பன்முக கலைஞர் மனோபாலா நம்மை விட்டுப் பிரிந்தார்… இவர் இயக்கிய படங்கள் மட்டும் இவ்வளவா?

-Advertisement-

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு தளங்களில் கால் பதித்தவர் மனோபாலா. இவர் சினிமா ஆசையில் தனது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடிவந்த போது கமல்ஹாசனுடன் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. கமல்ஹாசனின் பரிந்துரையினால் மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

பாரதிராஜாவை பார்க்க சென்ற தருணத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட மனோபாலா, “நான் பாரதிராஜாவை முதன்முதலில் பார்த்தபோதே வாயில் சிக்ரெட்டுடன்தான் இருந்தேன். கமல்ஹாசன் பெயரை மட்டும் சொல்லவில்லை என்றால் சிகரெட்டுடன் அவர் முன் நின்றதற்கு என்னை பளார் என அறைந்திருப்பார்” என்று மிகவும் கலகலப்பாக அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

பாரதிராஜா இயக்கிய “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் மனோபாலா நடித்திருந்தார். அவர் இயக்கிய முதல் திரைப்படம் “ஆகாய கங்கை”. அத்திரைப்படம் தோல்வியை தழுவியதால் மிகப்பெரிய சோகத்தில் மூழ்கினார் மனோபாலா. எனினும் அதன் பின் அவர் இயக்கிய “பிள்ளை நிலா” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.அதனை தொடர்ந்து “சிறைப்பறவை”, “ஊர்க்காவலன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய மனோபாலா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார்.

மனோபாலா இயக்கிய திரைப்படங்கள் மொத்தம் 24. மேலும் அவர் இதுவரை நடித்த திரைப்படங்கள் மொத்தம் 345. “சதுரங்க வேட்டை”, “பாம்பு சட்டை”, “சதுரங்க வேட்டை 2” என மூன்று திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

-Advertisement-

இந்த நிலையில் நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார். 69 வயதில் நம்மை விட்டு பிரிந்த மனோபாலாவிற்கு திரைத்துறையினர் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்