- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வனில் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? என்னப்பா சொல்றீங்க!..

பொன்னியின் செல்வனில் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? என்னப்பா சொல்றீங்க!..

-Advertisement-

தமிழ் சினிமா வரலாற்றில் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்க எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் யாருக்கும் அந்த முயற்சி கைக்கூடவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்க உள்ளார் எனவும் அதில் வந்தியத்தேவனாக விஜய்யும், அருள்மொழிவர்மனாக மகேஷ் பாபுவும் நடிக்க உள்ளார்கள் எனவும் தகவல் வந்தது. ஆனால் அப்போது அந்த புராஜெக்ட்டும் கைக்கூடவில்லை.இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மணிரத்னம் மீண்டும் “பொன்னியின் செல்வன்” புராஜெக்ட்டை தொடங்கினார். ஆனால் நடிகர்கள் வேறாக இருந்தனர். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு கலக்கல் காம்போவாக இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.

அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தொடங்கிய நிலையில் கொரோனாவால் சற்று மட்டுப்பட்டது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிவடைந்தது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த அமோக வரவேற்பை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளிவந்தது. இத்திரைப்படம் பலரை கவர்ந்திருந்தாலும் நாவலில் உள்ள பல சம்பவங்களை மணிரத்னம் கொஞ்சம் வேறு மாதிரி மாற்றி எடுத்திருந்ததால் நாவல் வாசகர்கள் இத்திரைப்படத்தை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இத்திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்த த்ரிஷா பலரது ரசிகர்களின் மனதை கவர்ந்து சென்றார். மேலும் இதில் சிறு வயது குந்தவையாக ஒரு சிறுமி நடித்திருந்தார். அக்கதாப்பாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் அச்சிறுமி. அச்சிறுமி யார் என்பது குறித்தான தேடலை இணையவாசிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அச்சிறுமி குறித்த செய்தி தெரியவந்துள்ளது.

-Advertisement-

அதாவது பிரபல சீரியல் நடிகையான கன்யா பாரதியின் மகள்தான் அவர். அச்சிறுமியின் பெயர் நிலா. நிலாவின் தந்தையும் கூட ஒரு நடிகர்தான். அவரது பெயர் கவிதா பாரதி. அவர்களது புகைப்படங்கள் இதோ…

-Advertisement-

சற்று முன்