ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் இதுதான், ஆனா நீங்க நினைக்கிற மாதிரி ரோஜா கிடையாது- உண்மையை உடைத்த வைரைமுத்து…

- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது உலகளவில் மிகப்புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆஸ்கர் மேடையில் தமிழை பெருமைப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான், தனது இளம் பருவத்தில் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஆதித்யன், டி.ராஜேந்தர் ஆகியோரிடம் மியூசியனாக பணியாற்றியிருக்கிறார். இதில் இளையராஜாவிடம் அதிக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

மணிரத்னம் இயக்கிய “ரோஜா” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதை பலரும் அறிந்திருப்போம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து ஒரு புதிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது பலரும் மணிரத்னம் இயக்கிய “ரோஜா” திரைப்படம்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் திரைப்படம் என்று நினைத்துக்கொண்டிருக்க ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் திரைப்படம் “ரோஜா” இல்லை என கூறியிருக்கிறார் வைரமுத்து.

வைரமுத்து கதை-வசனம் எழுதி அமீர்ஜான் என்பவர் இயக்கிய “வணக்கம் வாத்தியாரே” என்ற திரைப்படம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் திரைப்படம் என கூறியுள்ளார். இத்திரைப்படத்தை படமாக்கும்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஹரிஹரன் என்பவரிடம் பொருளாதார பிரச்சனை இருந்ததாம். ஆதலால் இத்திரைப்படத்திற்கு இளையராஜாவிற்கு அப்போது உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் வெறும் கீபோர்டை மட்டும் வைத்து முழு படத்துக்கும் இசையமைத்து தருமாறு கூறியிருக்கின்றார்

- Advertisement -

இதற்கு ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், இத்திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 8 மணி நேரத்திலேயே இசையமைத்துக்கொடுத்துவிட்டாராம். மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த சம்பத் செல்வன் என்ற இசையமைப்பாளருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் திரைப்படம் “வணக்கம் வாத்தியாரே” திரைப்படம்தான் என்று வைரமுத்து அப்பேட்டியில் கூறியுள்ளாராம். இந்த தகவல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்