Homeஇந்தியாஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைத்து, 4 ஆவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு பதவியேற்றார்.

தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் காரணமாக பவன் கல்யாண் துணை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் பவன் கல்யானுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

சற்று முன்