Homeஇந்தியாகெஜ்ரிவால் மனைவி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

கெஜ்ரிவால் மனைவி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, மார்ச் 28-ல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்பாக பேசினார். இது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நீதிமன்ற விதிகளுக்கு எதிரான செயல் இது எனக் கூறியிருந்தார்.

இந்த வீடியோவை சுனிதா மற்றும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் அமித் ஷர்மா, வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்குவதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சுனிதா விளக்கம் அளிக்க வேண்டும்.

வேறு யாரேனும் அந்த வீடியோவை மறுபதிவேற்றம் செய்தால், சமூக வலைதள நிறுவனங்கள் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மனு மீதான விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

சற்று முன்