Homeதொழில்நுட்பம்ஆதார் கார்டு எடுத்து பத்து வருடங்கள் கடந்து விட்டால் இதை கட்டாயம் செய்யணும்

ஆதார் கார்டு எடுத்து பத்து வருடங்கள் கடந்து விட்டால் இதை கட்டாயம் செய்யணும்

Aadhaar Updating : 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டாலும், அவை தொடர்ந்து செயல்படும் என்றும் யு.ஐ.டி.ஏ.ஐ. கூறியுள்ளது. ஆதார் அட்டை தொடர்பான இந்த வதந்தி சில நாள்களுக்கு முன்பு ஒரு செய்தியின் காரணமாக உருவானது.

ஆதார் அட்டை அப்டேட்: ஆதார் எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், அவற்றை புதுப்பிக்காதவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் அட்டை வேலை செய்யாது என்று சமூக ஊடகங்களில் ஒரு போலி செய்தி வைரலாக பரவியது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதை மறுத்துள்ளது. மேலும், இந்த செய்தி உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டாலும், அவை தொடர்ந்து செயல்படும் என்றும் யு.ஐ.டி.ஏ.ஐ. கூறியுள்ளது. ஆதார் அட்டை தொடர்பான இந்த வதந்தி சில நாள்களுக்கு முன்பு ஒரு செய்தியின் காரணமாக உருவானது. அந்த வகையில், ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2024 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

முன்னதாக, மார்ச் 14 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் யு.ஐ.டி.ஏ.ஐ. இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதியை ஜூன் 14 வரை நீட்டித்தது.
இதனால் ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டைகள் செல்லாது என்ற வதந்தி பரவத் தொடங்கியது. மக்கள் தங்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் புதுப்பித்திருந்தால் மட்டுமே இலவச அப்டேட் செய்யும் வசதி கிடைக்கும்.

இருப்பினும், ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று ஆதார் அட்டையைப் புதுப்பிக்க பணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஆதார் அட்டையில் ஒருவரின் தொலைபேசி எண் சேர்க்கப்படவில்லை என்றால், அதற்காக சேவா கேந்திராவுக்குச் செல்ல வேண்டும். இந்த புதுப்பித்தலுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
யு.ஐ.டி.ஏ.ஐ. இன் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டல் https://ssup.uidai.gov.in/ssup/ ஐ கிளிக் செய்யவும்.
‘லாகின்’ எ செய்து, உங்களின் தனிப்பட்ட 12 இலக்க ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டையும் பதிவிடவும்.
இதையடுத்து,‘சென்ட் ஓடிபி’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட ஓடிபி ஐ பதிவிடுங்கள்.
இப்போது சர்வீஸ் டேபின் கீழ் ‘அப்டேட் ஆதார் ஆன்லைன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது ‘புரொசீட் டு அப்டேட் ஆதார்’ என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஏற்கனவே ஆதார் அட்டையில் இருக்கும் உங்கள் பெயர் திரையில் தோன்றும்.
ஆவணங்களைப் பதிவேற்றுவதன் மூலம்விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம்.
மாற்றங்களை உறுதிப்படுத்தவும். உங்கள் தகவல் புதுப்பிக்கப்படும்.

சற்று முன்