Homeதொழில்நுட்பம்இந்த இடத்துக்கு போனீங்கன்னா உங்களுக்கான ஐபோன் கிடைக்கும்

இந்த இடத்துக்கு போனீங்கன்னா உங்களுக்கான ஐபோன் கிடைக்கும்

Google Pixel factory in Chennai: கூகுள் இதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முதலீட்டுத் தொகை மற்றும் சாத்தியமான வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. முதற்கட்டமாக, கூகுளின் பிக்சல் 8 ப்ரோ போன்கள், காஞ்சிபுரத்தில் உள்ள ஃபாக்ஸ்கானின் யூனிட்டில் தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னையில் கூகுள் பிக்சல் ஆலை: தமிழ்நாடு, மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாறும் நிலையில் அதனை மேலும் ஊக்கமளிக்கும் விதமாக, கூகுள் பிக்சல் போன்கள் மற்றும் ட்ரோன்களின் உற்பத்தியை சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முதலீட்டுத் தொகை மற்றும் சாத்தியமான வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. முதற்கட்டமாக, கூகுளின் பிக்சல் 8 ப்ரோ போன்கள், காஞ்சிபுரத்தில் உள்ள ஃபாக்ஸ்கானின் யூனிட்டில் தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, கூகுளின் ஆல்பாபெட், அதன் துணை நிறுவனமான விங் எல்எல்சி (Wing LLC) மூலம் தமிழகத்தில் ஆளில்லா விமானங்களைத் (ட்ரோன்) தயாரிக்கத் தொடங்கலாம். விங் எல்எல்சி தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் ட்ரோன் டெலிவரி சேவைகளை வழங்கி வருகிறது.
முதன்மையான ட்ரோன்கள் மூலம் 1.13 கிலோ வரை பேலோடுகளை சுமந்து செல்ல முடியும். ஆனால் புதிய மாடல்கள் 2.26 கிலோ வரை கையாளும். இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்துவதற்கு, கூகுள் மேற்கொண்ட ட்ரோன் உற்பத்திக்கான இந்த விரிவாக்கம் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முதலீட்டு ஈர்ப்பு
அமெரிக்காவில் உள்ள கூகுள் நிர்வாகிகளை சந்திக்க தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் பிற அதிகாரிகள் கொண்ட குழுவினரின் வருகையைத் தொடர்ந்து தமிழகத்தில் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது கணிசமான முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலத்தின் முனைப்பான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தி.மு.க அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியில் ரூ.8.61 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளது. இது, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் சமீபத்திய முக்கிய முதலீடுகள்
கூகுளின் எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளின் பரந்த போக்கின் ஒரு பகுதியாகும்.

வின்ஃபாஸ்ட் : தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த மின்சார வாகன வசதியை ஏற்படுத்த 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்: ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
கார்னிங்: காஞ்சிபுரம் அருகே கவர் கண்ணாடி உற்பத்தி நிலையம் அமைக்க ரூ. 1,000 கோடி முதலீடு செய்துள்ளது.
ஃபாக்ஸ்கான்: புதிய மொபைல் உதிரிபாக தயாரிப்பு பிரிவில் ரூ. 1,600 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ்: ஓசூரில் தற்போதுள்ள ஆலையை விரிவுபடுத்த ரூ. 7,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்