Homeதொழில்நுட்பம்சூரிய ஒளி பட்டதும் நிறத்தை மாற்றும் V29e ஸ்மார்ட் ஃபோன்.

சூரிய ஒளி பட்டதும் நிறத்தை மாற்றும் V29e ஸ்மார்ட் ஃபோன்.

விவோ நிறுவனம் V29e ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விவோ சீனாவின் டாங்குவான் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது விவோ நிறுவனம் உலகம் முழுவதும் தனது சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. விவோ ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளன. இந்திய சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் விவோ நிறுவனம், அவ்வபோது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விவோ நிறுவனம் V29e ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டர்ம்பர் மாதம் 07ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. விவோ, பிளிப்கார் ஆகிய ஆன்லைன் விற்பனை தளங்களில் இந்த செல்போனை புக் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகளில் வெளியாகவுள்ளது. 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி கொண்ட மாடலின் விலை 26 ஆயிரத்து 999 ரூபாயாகவும், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட மாடலின் விலை 28 ஆயிரத்து 999 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ V29e சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 13 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டைமன்ட் கட் க்ரிஸ்டல் மற்றும் ஷிம்மரிங் டெக்ஸ்ச்சர் வழங்கப்பட்டுள்ளதால் இது, இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆடம்பர தோற்றத்தை வழங்குவதோடு நிறம் மாறும் தன்மையையும் கொண்டுள்ளது. இது யு.வி. அல்லது சூரிய வெளிச்சம் படும் போது ரெட்-இல் இருந்து பிளாக் நிறத்திற்கு மாறும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது 64MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 50MP AF செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ள இந்த ஸ்மாட்போனிற்கு 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சற்று முன்