- Advertisement 3-
Homeவிளையாட்டு44 நாட்களில் 4 முறை இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்... ஆசிய கோப்பையில் மட்டும் 3...

44 நாட்களில் 4 முறை இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்… ஆசிய கோப்பையில் மட்டும் 3 முறைக்கு வாய்ப்பு… கருத்து சொன்ன ராகுல் டிராவிட்

- Advertisement 1-

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், இரு குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடக்கவுள்ளது. அதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கும், அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெறும்.

அதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஒரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி செப்.2லும், சூப்பர் 4 சுற்றுப்போட்டி செப்.10லும் நடக்கவுள்ளது. ஒருவேளை இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் செப்.17ல் மீண்டும் மோதிக் கொள்ளும். இப்படி இரு வாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் மோதும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும்போது, ஆசிய கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 முறை விளையாடும் வாய்ப்பு உருவாகும். ஆனால் மொத்தமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு போட்டியாக பார்த்து வெற்றிபெற வேண்டியது அவசியம்.

பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் கவனமாக இருக்கிறோம். நிச்சயம் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டால், அது சிறந்த அனுபவமாக இருக்கும். இரு வாரங்களில் மூன்று முறை மோதுவது எங்கள் இரு அணிகளுக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

இன்னொரு குரூப்பில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் உள்ளன. இதில் அனைத்து அணிகளும் வலிமையானது என்பதால், எந்த அணி இறுதிப்போட்டிக்கு வரும் என்று யாராலும் கூற முடியாது. ஏனென்றால் அண்மையில் வங்கதேசத்தை அதன்சொந்த மண்ணிலேயே ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

அதேபோல் ரசிகர்களிடையே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருடன் சேர்த்து 44 நாட்களில் 4 முறை இந்தியா – பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்