- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால், இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக வர வாய்ப்புள்ள...

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால், இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக வர வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பகுதியில் இருந்து நீக்கி வேறொருவரை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்கள் பெருமளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோஹித் சர்மா தனது பணியை சிறப்பாக ஆற்றி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை கொண்டு சென்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது. அதிலும் பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சொதப்பியதன் விளைவாக 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியுற்றது. இதனால் பல வருடங்களாக இந்திய அணி ஐசிசி ட்ரோபியை வெல்லாமலே உள்ளது.

இந்த நிலையில் புதிய WTC போட்டிகள் நடப்பதற்கு முன்பாக இந்திய அணிக்கு வேறொரு கேப்டன் தேவை என்ற குரல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிலர் கோலியையே திரும்பவும் கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் கோலி கேப்டன் பதவியை மீண்டும் வகிப்பாரா என்பது சந்தேகமே. அதனால் அவரை தவிர்த்து இந்திய அணிக்கு கேப்டனாக கூடிய வாய்ப்புள்ள மூன்று வீரர்களை இப்போது பார்ப்போம்.

3) சிரேயாஸ் ஐயர்:
ஸ்ரேயா செய்ய இந்திய அணியை சர்வதேச போட்டிகளில் வழிநடத்தவில்லை என்றாலும் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் ஐபிஎல்-லிலும் கேப்டனாக இருந்து தனது அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். அதேசமயம் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் அவர் மாறினார். தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள அவர், மீண்டும் விரைவாக அணிக்குள் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

மிடில் ஆடர் பேட்ஸ்மேனாக இருக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான பங்கை இந்திய அணிக்காக அளித்துள்ளார். அதேசமயம் ஒரு தைரியமான கேப்டனாகவும் இவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் டியோதர் டிராபியின் போது இந்திய பி அணிக்கு கேப்டனாக இருந்த அவர் அதில் அதிகப்படியான ரன்கள் அடித்த ஒரு வீரராக இருந்துள்ளார். அதே சமயம் ஐபிஎல்-இல் டெல்லி அணியையும், கொல்கத்தா ஐயையும் வழிநடத்திய அனுபவம் இவருக்கு உள்ளது.

2) ரிஷப் பண்ட்
25 வயதிலேயே இந்திய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவர் ரிஷப் பண்ட். அதேசமயம் இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தவர் ரிஷப் பண்ட். இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மேலும் சிறப்பு. ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்கு புதியவர் கிடையாது. கடந்த 2022 ஜூனில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 சீரிஸில் இந்திய அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். அதே சமயம் 2022 ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு இவர் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1) ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியனின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர் ஆவார். அதே சமயம் நல்ல அனுபவம் மிக்க வீரர். இதுவரை 90க்கும் மோர்மட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 474 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற இவரின் பங்கு பெறும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: நான் எப்படி பால் போடுவன்னே அவருக்கு தெரியாது. இந்த ஆஸ்திரேலிய வீரரலாம் அசால்ட்டா அவுட் ஆக்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து அஸ்வின் சொன்னதாக பயிற்சியாளர் ராஜாமணி பேச்சு

இதுவரை இந்திய அணிக்கு இவர் கேப்டனாக இருந்ததில்லை என்றாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவரை கேப்டனாக நியமிப்பது சிறந்த ஒரு ஆப்ஷனாகவே இருக்கும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் தேர்வாக உள்ளது. அதேசமயம் விரைவில் அவரை கேப்டனாக அறிவித்தால் இந்திய அணியை மெருகேற்ற அது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்