- Advertisement -
Homeகிரிக்கெட்இவ்ளோ ரன் அடிச்சா போதும்னு பசங்க கிட்ட சொன்னன்... அவர் மேல நம்பிக்கை வச்சன்.. ...

இவ்ளோ ரன் அடிச்சா போதும்னு பசங்க கிட்ட சொன்னன்… அவர் மேல நம்பிக்கை வச்சன்.. இனி இது தொடரும் – ஆப்கான் கேப்டன் பேச்சு

-Advertisement-

இந்த உலகக்கோப்பையின் முதல் அப்செட்டாக அமைந்தது ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து போட்டி. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் அட்டகாசமான தொடக்கத்தை தந்தார். 57 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர் என 80 ரன்களை விளாசி ரன் அவுட்டானார். மிடில் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி சொதப்பினாலும் விக்கெட் கீப்பர் இக்ராம் அலிகில் அணியை சரிவிலிருந்த்து மீட்டார். அரைசதம் கடந்த அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் முஜிப் உர் ரஹ்மான் 28, ரஷீத் கான் 23 என அதிரடியாக ஆடியதால் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை எட்டியது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி, ரஷீத் கான் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் சொல்லி வைத்தார் போல இங்கிலாந்து அணி சுருட்டினர். இவர்கள் மூவர் மட்டுமே 8 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த குர்பாஸை ரன் அவுட் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதியை கலாய்த்த ரசிகர்கள், 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்டதற்கு அவரது கேப்டன்ஷிப்பை புகழ்ந்துவருகின்றனர். இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத வெற்றியாக அமைந்துள்ளது. மேலும் உலகக்கோப்பையில் தொடர் 14 தோல்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.

-Advertisement-

இந்த நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதி கூறுகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அணி வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது எங்களது சிறந்த வெற்றி. இந்த வெற்றி எங்களுக்கு அடுத்துவரும் போட்டிகளுக்கு நம்பிக்கை தரும். அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். குறிப்பாக குர்பாஸ் சிறப்பாக ஆடினார்.

ஆனால் மிடில் ஓவர்களில் எதிர்பாரவிதமாக நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இரண்டு ஆண்டுகளாக இக்ரம் அலிகில் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றிவிட்டார். மேலும் முஜிப் உர் ரஹ்மானும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். நான் பேட்டிங் ஆடும் போது, சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்ய ஏதுவாக இந்த ஆடுகளம் இருக்காது என உணர்ந்தேன்.

இதனால் ஸ்கோர் 280-290 வந்தால் போதுமானது தான் என வீரர்களிடம் சொன்னேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. ஆனால் இன்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. குறிப்பாக அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஃபசால் உக் ஃபாருக்கு ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி வைத்தார். இந்த வெற்றி ஒரு ஆரம்பம்தான். இன்னும் இந்த தொடரில் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம். இது முதல் வெற்றிதான். கடைசி வெற்றி கிடையாது என ஊக்கத்துடன் பேசினார்.

-Advertisement-

சற்று முன்