- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை தொடர்.. வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் அஜித் அகர்கர்.. ரோகித்தின் திட்டம், டிராவிட்டின் கணக்கு என்ன?

உலகக்கோப்பை தொடர்.. வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் அஜித் அகர்கர்.. ரோகித்தின் திட்டம், டிராவிட்டின் கணக்கு என்ன?

- Advertisement 1-

பிசிசிஐ தேர்வு குழு தலைவராக சேட்டன் சர்மா ராஜினாமா செய்த பின், நீண்ட மாதங்களாக அந்த பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரையும் சந்திப்பதற்காக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அங்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் வருவதால் இந்த சந்திப்பை அஜித் அகர்கர் விரும்புவதாக தெரிகிறது.

தேர்வு குழு தலைவர் பொறுப்புக்கு வந்த அஜித் அகர்கர் இதுவரை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை சந்திக்கவில்லை. இதனால் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான ஆலோசனையாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம். உலகக்கோப்பை தொடருக்கு எப்படி தயாராவது, கேப்டன் ரோகித் சர்மாவின் திட்டம் என்னவாக உள்ளது, ராகுல் டிராவிட் என்ன கணக்கு போட்டுள்ளார் என்று பற்றி ஆலோசனை செய்யப்படலாம்.

உலகக்கோப்பை தொடருக்கு தேவையான வீரர்கள் யார்?, எத்தனை ஆல் ரவுண்டர்கள் தேவை, எத்தனை ஸ்பின்னர்கள் தேவை, பேட்டிங் வரிசை எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும், பேக் அப் வீரர்களாக யார் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement 2-

அதுமட்டுமல்லாமல் காயமடைந்த வீரர்களின் நிலை, அவர்கள் எப்போது கம்பேக் கொடுப்பார்கள் என்ற தகவல்களும் பரிமாறப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஆசிய போட்டிகளில் சிறப்பாக வீரர்கள் விளையாடினால், அவர்களை எப்படி உலகக்கோப்பை தொடருக்கு பாதுகாத்து வைப்பது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படலாம்.

ஏனென்றால் கடந்த முறை தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் உள்ளிட்ட அனைவரும் பேக் அப் வீரர்களாகவே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இம்முறையும் உலகக்கோப்பை தொடரின் காயம் ஏற்பட்டால், எந்த வீரரை தயார் செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பது அவசியமாக உள்ளது.

சற்று முன்