- Advertisement -
Homeகிரிக்கெட்13 ரன் கூட தாண்டாத 7 பேர்... 40.5 ஓவரில் மொத்தம் காலி... புள்ளி பட்டியலில்...

13 ரன் கூட தாண்டாத 7 பேர்… 40.5 ஓவரில் மொத்தம் காலி… புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென் ஆப்பிரிக்கா

-Advertisement-

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10-ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலபரீட்சை நடத்தினர்.

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக துவக்க வீரர் குவிண்டன் டி காக் 109 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 56 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தென்னாபிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்கதிணறியது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

-Advertisement-

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மூன்று விக்கெட்டுகளையும், மார்க்கோ யான்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்களான மகாராஜ் மற்றும் ஷம்ஸி தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்