- Advertisement -
Homeகிரிக்கெட்8 பேர் சிங்கிள் டிஜிட்... தத்தளித்த இலங்கை... புள்ளி பட்டியலில் ஜம்ப் அடித்த ஆஸ்திரேலியா.. நடந்தது...

8 பேர் சிங்கிள் டிஜிட்… தத்தளித்த இலங்கை… புள்ளி பட்டியலில் ஜம்ப் அடித்த ஆஸ்திரேலியா.. நடந்தது என்ன?

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 13-வது ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 16-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பிறகு வந்த வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே குவித்தது.

இலங்கை அணி சார்பாக துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 61 ரன்களையும், குசால் பெரேரா 78 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து அசலங்கா மட்டுமே 25 ரன்களை குவித்தார். இவர்களை தவிர்த்து இலங்கை அணியின் சார்பாக விளையாடிய 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

-Advertisement-

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் மிட்சல் மார்ஷ் 52 ரன்களையும், மார்னஸ் லாபுஷேன் 40 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 58 ரன்களையும் குவித்தனர். இறுதி நேரத்தில் அதிரடி வீரர்களான மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும்ம், ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்காமல் 20 ரன்களையும் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஒரு சிறிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதேவேளையில் இலங்கை அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்