- Advertisement 3-
Homeவிளையாட்டுரிஷப் பந்த் பத்தி காலையில் வந்த போன் கால்.. தூக்கத்திலேயே பயந்து போன அக்சர் படேல்.....

ரிஷப் பந்த் பத்தி காலையில் வந்த போன் கால்.. தூக்கத்திலேயே பயந்து போன அக்சர் படேல்.. என்ன நடந்தது..

- Advertisement 1-

கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மிகப் பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். ஒரு வருடமாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருந்து வரும் ரிஷப் பந்த், தன் காயத்தில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

முன்னதாக ரிஷப் பந்த் வேகமாக சென்ற கார் அதிகாலையில் சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதி ஒரு பக்கமாக சென்று கவிழ்ந்தது. தொடர்ந்து அந்த காரும் தீப்பிடிக்க, அங்கிருந்தவர்கள் உதவியுடன் ரிஷப் பந்த் மீட்கப்பட்டு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தார். மிகவும் மோசமான விபத்தாக அமைந்திருந்த நிலையில், அதன் பின்னர் ஒவ்வொரு கணத்திலும் தனது உடல்நிலை முன்னேற்றங்கள் குறித்த பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வந்தார்.

தற்போது அவர் விபத்தில் சிக்கி ஒரு வருடங்கள் ஆகி விட்டது. இதுவரை எந்த கிரிக்கெட் தொடரிலும் அவரை பார்க்க முடியாத நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களில் ரிஷப் பந்தை தான் ரசிகர்கள் பலரும் அதிகம் மிஸ் செய்திருந்தனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரில் ஆடுவதை காணவும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே வேளையில், அவர் இன்னும் முழுமையாக உடற்தகுதி பெறவில்லை என்று தான் தெரிகிறது. விரைவில் அதில் இருந்து சரியாகி சர்வதேச போட்டியில் ஆடி, டி 20 உலக கோப்பையையும் அவர் வென்று கொடுக்க வேண்டும் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அக்சர் படேல், ரிஷப் பந்த் விபத்தில் சிக்கய போது தனக்கு வந்த போன் கால் குறித்து சில்லிடும் தகவல் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். “காலையில் ஒரு 7 மணியளவில் பிரதிமா (முன்னாள் கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மாவின் மனைவி) என்னை அழைத்தார். நீ கடைசியாக எப்போது ரிஷப் பந்திடம் பேசினாய் என கேட்டார். நேற்று பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அழைக்கவில்லை என நான் கூற, ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது பற்றி என்னிடம் கூறினார்.

அதனை நான் கேட்டதும் அவர் இறந்து விட்டார் என்று தான் முதலில் கருதி பயந்து போனேன். நான் தான் ரிஷப்பிடம் கடைசியாக பேசி இருப்பேன் என பலரும் என்னை அழைத்தனர். இதன் பின்னர், ரிஷப்பின் மேனேஜரிடம் அழைத்து பேசிய போது அவர் நலமாக இருப்பதாகவும், ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றும் என்னிடம் கூறிய பின்னர் தான் நிம்மதியே வந்தது” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்