- Advertisement 3-
Homeவிளையாட்டுவாய்ப்பு இல்லாத சமயத்தில் கற்றுக் கொண்ட பாடம்.. காயத்தில் இருந்து மீண்டு அக்சர் படேல் சாதித்தது...

வாய்ப்பு இல்லாத சமயத்தில் கற்றுக் கொண்ட பாடம்.. காயத்தில் இருந்து மீண்டு அக்சர் படேல் சாதித்தது எப்படி?

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நான்காவது டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. ரோஹித் ஷர்மா, கோலி, கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இல்லாததால் இந்தியா அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியினர் சிறப்பாக ஆடியிருந்த சூழலில், 3 வது போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், இந்திய அணியின் வெற்றியை பறித்திருந்தது.

இந்த நிலையில் தான், இரு அணிகளும் நான்காவது டி 20 போட்டியில் களமிறங்கி இருந்தது. தாங்கள் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கவனமாக பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய இந்திய அணி, முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறித் தான் போனது. இருப்பினும் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா உதவியுடன் 20 ஓவர்களில் 174 ரன்களை இந்திய அணி குவித்தது.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, அக்சர் படேல் சூழலுக்கு அடிபணிந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக, 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரையும் அபாரமாக வென்றது இந்திய அணி. அற்புதமாக பந்து வீசிய அக்சர் படேல், முதல் நான்கு விக்கெட்டுகளில் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாகவும் தேர்வாகி இருந்தார்.

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கி வரும் அக்சர் படேல், காயம் காரணமாக உலக கோப்பையில் இடம்பெற்ற பிறகும் ஆட முடியாமல் போனது. தொடர்ந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ள அக்சர் படேல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு அக்சர் படேல் பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement 2-

“வீட்டில் இருந்த சமயத்தில் நான் மேற்கொண்ட நிறைய முயற்சிகள் எனக்கு இந்த போட்டியில் கைகொடுத்தது. நான் அடிபட்டாலும் பிரச்சனையில்லை என்று ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசினேன். பனிப்பொழிவு இருக்கும் சமயத்தில் அதனைக் கடந்து வர இது தான் ஒரே வழி. அதே போல டி 20 போட்டிகளில் நாம் விக்கெட் எடுக்கும் உத்வேகத்துடன் தைரியமாக பந்து வீசினால் தான் வேலைக்கு ஆகும்.

காயத்தால் நான் இடைவெளி எடுத்துக் கொண்ட சமயத்தில், என்னை நான் மேம்படுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி, பந்து வீச்சில் புதிய வேரியேஷன்களையும் முயற்சி செய்து என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்” என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

சற்று முன்