- Advertisement -
Homeகிரிக்கெட்சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள சூப்பர் வாய்ப்பு. வளரும் வீரர்கள் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்....

சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள சூப்பர் வாய்ப்பு. வளரும் வீரர்கள் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம். இவரோட மேலும் ஒரு தமிழக வீரருக்கும் வாய்ப்பு.

-Advertisement-

எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்தமுறை இந்த தொடர் இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக கொரோனா காரணமாக பிசிசிஐ இந்த தொடருக்கான இந்தியா ஏ அணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஏ அணியை பிசிசிஐ அனுப்புகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில் 2022 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துல் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.அபிஷேக் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சனும் அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரரான பிரதோஷ் ரஞ்சன் பால்-ம் அணியில் இடம் பெற்றார். பந்துவீச்சாளர்களில், மானவ் சுதர் மற்றும் யுவராஜ்சிங் டோடியா  ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் ஒரு பகுதியாக இருந்தனர்.

-Advertisement-

நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஏ ஆகிய அணிகளுடன் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இலங்கை ஏ, பங்களாதேஷ் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் ஓமன் ஏ பிரிவில் குழு ஏ பிரிவில் உள்ளன. இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி ஜூலை 23ஆம் தேதி நடைபெறும்.

அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணி
சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா (து. கேப்டன்), நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கேப்டன்), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் , துருவ் ஜூரல், மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

-Advertisement-

சற்று முன்