- Advertisement 3-
Homeவிளையாட்டு15 வருசமா முயற்சி செய்றேன்... அவர மட்டும் எதிர்கொள்ள முடியல.. ஓரங்கட்டப்பட்ட இந்திய பவுலர் குறித்து...

15 வருசமா முயற்சி செய்றேன்… அவர மட்டும் எதிர்கொள்ள முடியல.. ஓரங்கட்டப்பட்ட இந்திய பவுலர் குறித்து புலம்பிய ஆரோன் பிஞ்ச்

- Advertisement 1-

செந்தில் என்றால் கவுண்டமணியிடம் அடி வாங்குவது வழக்கம். அதேபோல் கிரிக்கெட்டிலும் சில வீரர்கள் சில பவுலர்களிடம் தொடர்ந்து ஆட்டமிழந்து வருவார்கள். எப்படி டேவிட் வார்னருக்கு பிராட் போலவும் மேத்யூ ஹைடனுக்கு ஜாகிர் கான் போலவும் இருக்கிறார்களோ அதே போல ஆரோன் பிஞ்ச்சுக்கும் ஒருவர் இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பிஞ்ச், இந்திய பவுலர் ஒருவரிடம் தொடர்ந்து அடிவாங்கியது குறித்து தற்போது புலம்பி இருக்கிறார். அது வேறு யாருமல்ல இந்திய அணியில் இருந்து தற்போது ஓரங்கட்டப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தான்.

புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வேகம் இருக்காது, ஆனால் விவேகம் இருக்கும். கரடு மேடான மைதானங்களில் கூட பந்தை இங்கிலாந்தில் ஸ்விங் செய்வது போல் பந்து வீசுவார். அதுதான் அவரிடம் இருக்கும் திறமையே.

இந்த பவுலரை அடித்து விடலாம் என நினைக்கும் அனைத்து வீரர்கள் வீக்கெட்டையும் காவு வாங்குவதில் புவனேஸ்வர் குமார் வல்லவர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரராக அறியப்பட்ட முன்னாள் கேப்டனான ஆரோன் பிஞ்ச் புவனேஸ்வர் குமார் நினைத்து பல தூங்கா இரவுகளை கழித்திருக்கிறார்.

- Advertisement 2-

2019 ஆம் ஆண்டு குறிப்பாக புவனேஸ்வர் குமார் ஓவரில் தொடர்ந்து நான்கு முறை ஆட்டம் இழந்து சோகமான சாதனையையும் படைத்திருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் 2016 ஆம் ஆண்டு சீசனிலும் பின்ச் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் ரெண்டு முறை வீழ்த்தி இருக்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் புவனேஸ்வர் குமாரிடம் மட்டும் நீங்கள் ஏன் ஆட்டம் இழந்து வருகிறீர்கள்? அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் 15 ஆண்டுகளாக அது நடக்காமல் இருக்க நான் முயற்சி செய்கிறேன் என்று கூறி இருந்தார்.

இதை ரசிகர்கள் அதிக அளவு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு முன்னணி பேட்ஸ்மேனை கதிகலங்க விட்ட ஒரு வேகப்பந்துவீச்சாளரை தற்போது இந்திய அணியில் சேர்க்காமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சற்று முன்