- Advertisement -
Homeகிரிக்கெட்ரொம்ப வருத்தமா இருக்கு... ஆரம்பத்துலையே நான் மிஸ் பண்ணிட்டன்.. பிரஷர்ல வீரர்கள் நல்லா ஆடணும்...

ரொம்ப வருத்தமா இருக்கு… ஆரம்பத்துலையே நான் மிஸ் பண்ணிட்டன்.. பிரஷர்ல வீரர்கள் நல்லா ஆடணும் – தோல்விக்கு பின் ஜோஸ் பட்லர் பேச்சு

-Advertisement-

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணி ஆடிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி இரண்டிலும் தோல்வியடைந்தது.

இதனால் இன்றைய போட்டியிலும் இங்கிலாந்திடம் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியே அடையும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் களத்தில் நடந்ததோ அனைத்தும் தலைகீழ். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் செய்ய முடிவடெுத்தது. அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களை அடித்தார்.

285 ரன்களை இங்கிலாந்து அணி அசால்ட்டாக சேஸ் செய்துவிடும் என நம்பியிருந்த ரசிகர்களுக்கு தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சூழலில் சிக்கித்தவித்த இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு சுருண்டு, இந்த உலகக்போப்பையின் முதல் அப்செட்டை தந்தது. ஹாரி ப்ரூக்கை தவிர மற்ற வீரர்களெல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் கணக்கை தொடங்கியுள்ளது. மேலும் இது ஓவர் கான்ஃபிடென்ட்டில் கிடைத்த தோல்வி என இங்கிலாந்து அணியை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். இந்த நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில், டாஸ் வெற்றிபெற்று இவ்வளவு அதிகமான ரன்களை வழங்கியது வருத்தமாக இருக்கிறது.

-Advertisement-

குறிப்பாக முதல் பந்தில் லெக் சைட் வெயிட் பவுண்டரியை நான் தடுக்க தவறினேன். அதுவே அவர்களுக்கு நல்ல ஒரு டோனை செட் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் அனைத்திலும் எங்களை விட சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்டிங் பவுலிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. மைதானத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லை.

ஆப்கானிஸ்தான் அணியிடம் அருமையான சூழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பந்தை ஸ்ட்ரைட்டாகவும், ஸ்டெம் டூ ஸ்டெம்பாகவும் வீசினர். இந்த தோல்வி வருத்தம் அளிக்க கூடியதுதான். இந்த தோல்வி நம்மை காயப்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் மீண்டு வர முடியும். அணியில் பலவிதமான வீரர்கள் இருக்கிறார்கள் எல்லோரும் ஒன்றிணைத்து வலுவாக மீண்டு வர வேண்டும். கடினமாக சூழலில் அழுத்தத்தின் கீழ் வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும். அப்படி தான் இனி இருக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்