- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்தா இருந்தாலும் அதான் செஞ்சுருப்பாரு.. தோல்விக்கு பின் டீன் எல்கர் சொன்ன காரணம்..

ரோஹித்தா இருந்தாலும் அதான் செஞ்சுருப்பாரு.. தோல்விக்கு பின் டீன் எல்கர் சொன்ன காரணம்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் தெ. ஆ அணிகள் மோதி வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதல் போட்டியில் மிகவும் மோசமாக தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, அதற்கெல்லாம் சேர்த்து 2 வது டெஸ்ட் போட்டியில் தெ. ஆ அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் தெ. ஆ அணி 55 ரன்களும், இந்திய அணி 153 ரன்களும் எடுத்திருந்தது.

இதனையடுத்து, 2 வது இன்னிங்ஸை தொடங்கிய தெ. ஆ அணி, மீண்டும் பேட்டிங்கில் சொதப்ப 176 ரன்களுக்கு அவர்கள் ஆல் அவுட்டாகினர். பின்னர் 79 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்து விமர்சனங்கள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி இருந்தது. இரு அணி வீரர்களும் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.

தெ. ஆ அணியின் கேப்டனாக இருந்த டீன் எல்கரின் கடைசி டெஸ்ட் போட்டித் தொடரில் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடி தெ. ஆ அணி வெற்றி பெறுவதற்காக 185 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். இரண்டாவது டெஸ்டில் பெரிய அளவிலான ஆட்டத்தை அவர் ஆடவில்லை என்றாலும் முதல் போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது மற்றும் தொடர் நாயகன் விருது வென்றது பற்றி பேசிய டீன் எல்கர், “இது மிகவும் கடினமான ஒன்று தான். முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கே எங்களை கொன்று விட்டது. பிட்ச்சின் தன்மையை அறிந்து இந்திய அணியினர் சிறப்பாக பந்து வீசினர். இரண்டு போட்டிகளையும் வென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் 1 – 1 என்ற கணக்கில் முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தெ. ஆ பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் பந்து வீசியதும், மார்க்ரம் 2 வது இன்னிங்சில் அடித்த சதமும் அபாரமானது.

- Advertisement 2-

இங்கே டாஸ் வென்று நான் பேட்டிங் எடுத்தது தப்பான முடிவு என்று நினைக்கவே மாட்டேன். ரோஹித் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங்கை தான் எடுத்திருப்பார். ஆனால், இந்திய அணியினர் முதல் நாள் முதல் செஷனிலேயே எங்களை காலி செய்து விட்டனர். இந்த போட்டியில் இன்னும் கொஞ்சம் ஆடியிருக்க வேண்டும் என விரும்பினேன். இன்னும் கொஞ்சம் ரன்கள் எங்கள் பக்கம் இருந்திருந்தால் இந்திய அணியை கட்டுப்படுத்த நினைத்திருப்போம்.

இருந்தும் செஞ்சுரியன் மைதானத்தில் என்னுடைய ஆட்டத்தை எண்ணி பெருமையாக தான் உள்ளது. ஜெயிப்பதற்காக பங்காற்றியதும் பெரிய மகிழ்ச்சி. உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக சவாலாக களமிறங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த வகையில், பும்ரா ஒரு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர். இந்திய அணியை இனி எதிர்கொள்ள வேண்டாம் என்பதால் நான் பெருமிதம் கொள்கிறேன்.

2012 ஆம் ஆண்டில் அறிமுகமான பிறகு ஏராளமான நினைவுகள் மற்றும் சிறந்த தருணங்கள் உள்ளது. அவற்றிற்கு மிகவும் ஸ்பெஷலான இடமும் உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்காக இந்த பயணமும் பெருமை வாய்ந்தது” என தனது கடைசி டெஸ்ட் போட்டியில் மனமுருக பேசி உள்ளார் டீன் எல்கர்.

சற்று முன்