- Advertisement -
Homeகிரிக்கெட்என்னால் இன்னும் விளையாட முடியும். சூர்யகுமாரோடு நான் இதை செய்யணும் - ஏபி டி வில்லியர்ஸ்...

என்னால் இன்னும் விளையாட முடியும். சூர்யகுமாரோடு நான் இதை செய்யணும் – ஏபி டி வில்லியர்ஸ் ஆசை

-Advertisement-

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவர். டி வில்லியர்ஸ் ஆடுகளத்தில் தனது வித்தியாசமான ஷாட்களால் மற்றும் ரன்குவிக்கும் வேகத்துக்காக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான அவர்  மே 2018 இல் தனது 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது எந்த விதமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. சமீபத்தில் தனது ஓய்வு பற்றி பேசிய அவர் கிரிக்கெட்டில் இருந்து மிகச் சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிட்டதாக கூறியுள்ள்ளார். கிரிக்கெட் ஆடுகளத்தில் திரும்ப வருவதாக இருந்தால் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியுடன் போட்டியிட விரும்புவதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி பேசிய அவர் ” என்னால் இன்னும் விளையாட முடியும். ஆனால் அதற்கான உந்துதல் இப்போது இல்லை. அது எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும். நான் மீண்டும் வந்தால் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன், சூர்யகுமார் மற்றும் கோலியுடன் போட்டியிட விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் போது டி வில்லியர்ஸ் கோலியுடன் இணைந்து பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவருடன் இணைந்து பல மறக்கமுடியாத பார்ட்னர்ஷிப்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

-Advertisement-

மேலும் “எனது கேரியரின் பின் பகுதியில் நான் நிச்சயமாக போதுமான கிரிக்கெட் விளையாடவில்லை. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என்னால் விளையாட முடியாது, ஏனென்றால் நான் உலகில் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன், வருடத்தில் மூன்று மாதங்கள் விளையாடினால் உங்களால் அதைச் செய்ய முடியாது. முற்றிலும் வாய்ப்பு இல்லை. ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான பார்மட்களுக்கும் ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட வீரர்களில் ஒருவர். ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம், குறைந்த பந்துகளில் சதம் மற்றும் குறைந்த பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தது ஆகிய சாதனைகளை கைவசம் வைத்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்