- Advertisement 3-
Homeவிளையாட்டுகடைசி ஓவர்ல எப்படி ஆடுனா கேம்ம முடிக்கலாம்னு தோனி என்கிட்ட சொன்ன ரகசியம் இது தான்...

கடைசி ஓவர்ல எப்படி ஆடுனா கேம்ம முடிக்கலாம்னு தோனி என்கிட்ட சொன்ன ரகசியம் இது தான் – ரிங்கு பகிர்ந்த சூப்பர் தகவல்

- Advertisement 1-

நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் கொல்கத்தா அணிக்கு சோகமான ஒன்றாக அமைந்தது. ஏனென்றால் இந்த சீசனில் அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் போட்டிகளோடு வெளியேறியது. லீக் போட்டிகளின் முடிவில் 12 புள்ளிகளோடு 8 ஆவது இடத்தில் நிறைவு செய்தது.

ஆனாலும் இந்த சீசனில் கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கிடைத்துள்ளார் ரிங்கு சிங். பினிஷிங்கில் அந்த அணியின் ரஸ்ஸல் தொடர்ந்து சொதப்ப அந்த குறையை போக்கியுள்ளார் ரிங்கு சிங். 25 வயதாகும் ரிங்கு சிங் இந்த சீசனில் அவரது அதிரடி இன்னிங்ஸ்களால் பலரையும் கவர்ந்துள்ளார்.

குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை விளாசி அணியை நம்பமுடியாத வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அந்த இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை ‘யார்றா இந்த பையன்?’ என ஆச்சர்யமாக பார்க்கவைத்தார். இந்த இன்னிங்ஸ் மட்டும் இல்லாமல் இந்த சீசனில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கான ரன்களை சேர்த்து நம்பிக்கை அளித்திருக்கிறார்.

இதனால் அவரை விரைவில் இந்திய டி20 அணியில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பினிஷர் ரோலில் கலக்கும் ரிங்கு சிங் இந்திய அணியின் பினிஷிங் மாஸ்டர் தோனி தனக்குக் கொடுத்த அட்வைஸ் ஒன்றை பற்றி இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement 2-

தோனி குறித்து அவர் கூறியது பின்வருமாறு, மஹி பாய் சிறந்த ஃபினிஷர், அதனால் அவரிடம் நான் ஆட்டத்தை பினிஷ் செய்ய என்ன வழிகள் உள்ளன என்று கேட்டேன். அதற்கு அவர் “நான் உன் பேட்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நீ நன்றாக பேட்டிங் செய்கிறாய். கடைசி ஓவர் நடக்கும் போது பந்தைப் பார்த்து நேராக அடிக்க முயற்சி செய். பந்து வீச்சாளர் அவர் விரும்பியதைச் செய்யட்டும்’ என்று கூறினார்” என நினைவு கூர்ந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: இவர் தான்பா இந்த காலத்து சச்சின். இவரோட விக்கெட் எடுக்கறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்லை – இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

பல இளம் வீரர்களுக்கு தோனி போட்டிகள் முடிந்த பின்னர் அவர்களோடு பேசி சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். இளம் வீரர்கள் இதை பெருமையோடு பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற ஒரு சிரிப்பான அறிவுரை ஒரு தனபான மனிதரிடம் இருந்து கிடைத்தும் நிச்சயம் ரிங்குவிற்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சற்று முன்